scorecardresearch

அதிகரிக்கும் கொரோனா தொற்று : கோவையில் சிகிச்சையில் இருந்த பெண் மரணம்

கோவை மாவட்டத்தில் தினமும் 10 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.கொரோனா காரணமாக தற்போது 92 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Coimbatore
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55″வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.கொரோனா பரவலை தடுக்க அரசு மருத்துவமனைகள், தியேட்டர், பஸ், வணிக வளாகம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தினமும் 10 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.கொரோனா காரணமாக தற்போது 92 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கோவை உப்பிலிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான பெண் கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி இணை நோயான, கேன்சர், கல்லீரல் உள்ளிட்ட. பிரச்சனைகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.அப்போது அவருக்கு அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அந்த பெண்ணை கொரோனா வார்டுக்கு மாற்றி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றினால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu covid women death in coimbatore government hospital

Best of Express