கடலூரில், கியா சொகுசு காரில் 6 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை கடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கியாக்காரையும் போதைப் பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். சம்பவ இடத்திற்கு கடலூர் எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு தப்பிச்சென்ற குற்றவாளி தேடும்படி முடிக்கி விட்டுள்ளார்
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பித்த உத்தரவின்பேரில் விருத்தாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கவிதா, காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை உதவி ஆய்வாளர் தவசெல்வம், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சந்துரு மற்றும் போலீசார் விருத்தாச்சலம் வயலூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொது அந்த வழியாக வந்த Kia கார் பதிவெண் TN 47 BY 6464 என்ற வெள்ளை நிறம் காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்று நிறுத்திவிட்டு போதைப்பொருள் கடத்தி வந்த எதிரி தப்பி ஓடி விட்டார். பின்னர் காரை சோதனை செய்தபோது 26 வெள்ளை சாக்கு மூட்டையில் 390 கிலோ போதை குட்கா பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூபாய் 5,85,000 ஆகும். போதை குட்கா பொருளை கடத்தி வந்த கார் மற்றும் போதை பொருட்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போதை பொருட்களை கடத்தி வந்த குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். போதை பொருட்களை பிடித்த கடலூர் மாவட்ட காவல்துறையினரை கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டின
செய்தி: பாபு ராஜேந்திரன்.