கடலூரில் ஒரே நாளில் பல்வேறு வீடுகளில் தஞ்சம் அடைந்த 13 பாம்புகளை பாம்பு பிடிப்பாளர் செல்லா பிடித்த நிலையில், இன்று அந்த பாம்புகள் வனப்பகுதியில் விடப்பட்டது
வெயில் காலம் வந்து விட்டாலே விஷப் பாம்புகள் குளிர்ச்சியான பகுதிக்கு இடம்பெறுவது வழக்கம். இதனால் பகல் நேரங்களில் சாதாரண பாம்புகளும், இரவு நேரங்களில் விஷப் பாம்புகளும் இறை தேட வரும் போது எங்கு குளிர்ச்சியாக இருக்கிறதோ அந்த இடத்தில் தஞ்சம் அடைந்து விடுகிறது. அந்த வகையில், கடலூர் பகுதியில் பல்வேறு வீடுகளில் 13 பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாம்பு பிடிப்பவர் செல்லா கூறுகையில், கோடை வெயில் காலம் என்பதால் விஷப்பாம்புகள் எங்கு குளிர்ச்சியாக இருக்கிறதோ அங்கு வந்து தங்க முடிவு செய்யும். கழிவறை அடர்த்தியாக குளிர்ச்சியாக இருக்கும் பகுதிகளில் வீடுகளில் தஞ்சம் அடைவது வழக்கம். எனவே பொதுமக்கள் நாம் வீட்டைச் சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடர்த்தியான பொருட்களை அப்புறப்படுத்திவிட்டு அனைத்து இடமும் காலி செய்து வைக்க வேண்டும் என கூறினார்