கடலூர், புதுச்சேரி மாநிலத்தில் குற்றங்களை கண்டுபிடிக்க 50 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடலூர் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆனந்தம் சில்க்ஸ் உதவியுடன் புதியதாக 26 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. கடலூர் எஸ்பி ( CCTV Camara ) துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின், கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, ஆனந்தம் சில்க்ஸ் நிர்வாகிகள் ராஜகுரு, பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோன்று புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையின் மூலமாக சாலை விதிகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பதற்கும், ஹெல்மெட் அணிவதற்கும், சாலை விபத்துகளை தடுப்பதற்கும், புதுச்சேரி அரசு போக்குவரத்து காவல்துறையானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் வில்லியனூர் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு உட்பட்ட முக்கிய சந்திப்புகளில் புதிய சிக்னல்கள் பொருத்தும் பணியானது கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது.
இந்த புதிய சிக்னல்களை மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வருவதற்கான போக்குவரத்து போலீசார் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியை ஆய்வு செய்வதற்காக புதுச்சேரி சட்டம் ஒழுங்கு டி.ஐ.ஜி சத்யசுந்தரம் வில்லியனூர் கண்ணகி ஹைமாஸ், எம்.ஜி.ஆர் சதுக்கம், பத்துக்கண்ணு, சேதராப்பட்டு ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள புதிய சிக்னலை பார்வையிட்டார்.
மேலும் ஆய்வின்போது போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் திருப்பாதி, காவல் கண்காணிப்பாளர்கள் மோகன்குமார், செல்வம், வில்லியனூர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் கணேஷ், உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடனிருந்தனர்.