New Update
/indian-express-tamil/media/media_files/2SCYyQ3GpYjKmFigz8nx.jpg)
கடலூர் போலீஸ் விழிப்புணர்வு கூட்டம்
மாநகராட்சி மற்றும் காவல்துறையினரின் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே டிஜிட்டல் போர்டு பிரிண்ட் அடித்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் போலீஸ் விழிப்புணர்வு கூட்டம்
பாபு ராஜேந்திரன் கடலூர்
கடலூர் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி சொல்லும் இடத்தில் மட்டுமே பேனர் வைக்க வேண்டும் என இன்று நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
கடலூர் மாவட்ட காவல் எஸ்.பி.இரா.இராஜாராம், கடலூர் டிஎஸ்பி. பிரபு தலைமையில், கடலூர் பகுதியில் உள்ள டிஜிட்டல் பிரிண்டர்ஸ் கடை உரிமையாளர் மற்றும் மேலாளர்களை அழைத்து விழிப்புணர்வு கூட்டம் இன்று நடத்தப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி மற்றும் காவல்துறையினரின் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே டிஜிட்டல் போர்டு பிரிண்ட் அடித்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சி அனுமதிக்கப்பட்ட இடங்களின் மட்டுமே டிஜிட்டல் பேனர்களை வைக்க வேண்டும் எனவும், மாநகராட்சி அனுமதிக்கப்படாத இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க கூடாது. டிஜிட்டல் போர்டு அடிக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு தகவல் கூற வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கடலூர் மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜசேகரன் கலந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.