/indian-express-tamil/media/media_files/2025/10/27/cyclone-koondu-2025-10-27-09-03-06.jpg)
'மோந்தா' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று கடலூர் துறைமுகத்தில் 2 எண் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் யாரும் கலந்து கடலுக்கு செல்லவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யன் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,
‘மோந்தா’ புயல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. எனவேஅடுத்த 24 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுவடைந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை அல்லது இரவு நேரத்தில் ஆந்திர கடலோர பகுதிகளான மசூலிப்பட்டினம்-கலிகங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகே தீவிர புயலாக கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு மோந்தா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 90 கிலோ மீட்டர் முதல் 110 கிலோ மீட்டர் வரை இருக்கும் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஆந்திர மாநிலம் காக்கி| லத்தின் பிராந்திய பகுதியான நாடா அருகே புதுவை மாநிலம் ஏனாம் அமைந்துள்ளது. அதாவது புதுவையில் இருந்து 750 கி.மீ.தூரத்துக்கு அப்பால் ஏனாம் உள்ளது.
காக்கிநாடாவில் இருந்து ஏனாம் 32 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. புயல் காக்கிநாடா அருகே கரையை கடப்பதால் புயலின் தாக்கம் ஏனாமில் பாதிப்பை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.
'மோந்தா' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஏனாம் மண்டல நிர்வாகி அங்கித்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏனாம் நிர்வாகம் சார்பில் புயல் முன்னெச்சரிக்கைநடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரகாலகட்டுப் பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 0884-2321223, 2323200 தொடர்பு கொள்ளலாம்ஏனாமிற்கு பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஏனாமில் உள்ள அனைத்து பள்ளிகளும் நிவாரண மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. புயல் காரணமாக ஏனாமில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் நாளை மறுநாள் (புதன் கிழமை) வரை 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் மின்பிடிக்க செல்ல வேண்டாம். மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா படகு இல்லம் தற்காலிகமாக மூடப் பட வேண்டும்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/27/pua-2025-10-27-11-08-14.jpg)
புயல் முன்னெச்சரிக்கையாக அனைத்து துறை ஊழியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட விவ சாய நிலங்களையும், கால்நடைகள் உயிரிழப்பு குறித்து கணக்கெடுக்கவும் மழைநீர் தடையின்றி செல்ல முக்கிய வடிகால்களை உடனடியாக தூர்வாரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய வாங்கி பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு அங்கு பொதுமக்களுக்கு தண்ணீர், செல்ல வேண்டும். தேவையான உணவு, மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஎன இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இன்று கடலூர் புதுச்சேரி புயல் எச்சரிக்கை சின்னமான இரண்டாம் என் கொடி ஏற்றப்பட்டுள்ளது கடலூர் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு யாரும் செல்லவில்லை இன்று காலை முதல் மேக மூட்டத்துடன் வானிலை காணப்பட்டு வருகிறது ஆங்காங்கே லேசான தூறல் ஏற்பட்டு வருகிறது கடலூர் புதுச்சேரி பகுதிகளில் அனைத்து ஏற்படும் தீவிர படுத்தப்பட்டுள்ளது
பாபு ராஜேந்திரன் கடலூர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us