கடலூரில் விபத்தில் இறந்த பள்ளி மாணவனின் படத்திறப்பு விழா, மற்றும் போக்குவரத்து விழிப்புணர் நிகழ்ச்சியில் மாணவர்களின் காலில் விழுந்து அழுத தந்தையின் வீடியோ காட்சிகள் பார்ப்பவரின் கண்களை குலமாக்கி உள்ளது
படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வார்த்தைக்கு ஏற்ப, கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவன் கமலேஷ் நேற்று (நவம்பர் 27)மாலை படிக்கட்டில் பயணம் செய்தபோது,தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவர் மீது பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் பேருந்து படிகட்டில் மாணவர்கள் பயணம் மேற்கொள்வதை தடுக்க மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய நிலையில், இன்று கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அமர்நாத், கடலூர் புதுநகர் காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
புனித வளனார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்காக சாலை விபத்தில் மரணம் அடைந்த கமலேஷின் தந்தை கண்ணதாசன் வரவழைத்து மாணவனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதன் சாலை விபத்துக்கள் மற்றும் சாலையில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வது தொடர்பாக சக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரைகள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் கைலாஷின் தந்தை கண்ணதாசன், கீழே விழுந்து தயவு செய்து படியில் பயணம் செய்யாதீர்கள் என கதறி அழுத காட்சியை கண்ட அனைவருக்கும் கண் கலங்கினார்கள். இதனை பார்த்த மாணவர்கள் இனி இனிமேல் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய மாட்டோம் என உறுதியளித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“