கனமழை அறிவிப்பு காரணமாக தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை (நவம்பர் 29) கடலூர் மாவட்டத்தற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை (நவம்பர் 29) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அறிவித்துள்ளார்.
கன மழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை (நவம்பர் 29) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 30) ஆகிய இரு தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அறிவித்துள்ளார். நாளை பள்ளிகள் விடுமுறை என கலெக்டர் ஆதித்யன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“