/indian-express-tamil/media/media_files/2025/05/15/17S5tgltm4zWtGxQ0ecd.jpg)
கடலூர் மாவட்டத்தில் ராயல் சூப்பர் பேப்ரிக்ஸ் தொழிசாலை நிறுவனத்தில் இன்று அதிகாலை பாயிலர் வெடித்து அருகாமையில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்த நிலையில், உடல் நிலை பாதிப்பு காரணமாக 20 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் குடிகாடு அருகே சிப்காட் பகுதியில் லாயல் சூப்பர் பேப்ரிக்ஸ் நிறுவன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் கொதிகலம் வெடித்ததால் அந்த பகுதியில், உள்ள விடுகளில் தண்ணீர் புகுந்தது. அதிகாலை நேரம் என்பதால் வீடுகளில், தூங்கிக்கொண்டிருந்த மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அளவிற்கு அதிகமான 6 லட்சம் கன அடி கொண்ட கொதிகலம் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்த்தால்,பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தண்ணீரில் மூழ்கிய மக்களை உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்த காப்பாற்றினார்கள். இது சுனாமி ஏற்பட்ட நிலைமை தங்களுக்கு வந்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இந்த விபத்தின் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் இதுவரையில் சுமார் 70-க்கும் மேற்பட்டவர்கள் கண் எரிச்சல் மூச்சுத் திணறல் மயக்கம் உடல் சோர்வு போன்ற காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொதிகலன் வெடித்து குடிகாடு சிப்காட் பகுதியில் உள்ள கிராம மக்கள் கடலூர் டு சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைகள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் காலை நான்கு மணி அளவில் சாலை மறியல் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், புதுநகர் காவல்துறையில் நடத்திய பேச்சு வார்த்தையில் சமாதானம் ஏற்பட்ட பின்னர் வழக்கம்போல் பஸ் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. அதிகாலை உறங்கும் நேரத்தில் 6 லட்சம் கன அடி கொண்ட பொதுகலன் வெடித்து அப்பகுதி தண்ணீரால் மூழ்கிய சம்பவம் சிப்காட் பகுதி அருகில் வசிக்கும் பொது மக்களுக்குமிகுந்த சோகத்தை வரவைத்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.