தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் படுகொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பெரும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஹோட்டலில் ஊழியரை கத்தியால் குத்தி படுகொலை செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தர்மபுரி மாவட்டம் இலக்கியப்பட்டி என்ற பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் எதிரில், தொப்பி வாப்பா என்ற பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை திறந்து சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், இந்த கடையில், முகமது யாசிக் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இதனிடையே நேற்று கடைக்கு சாப்பிட வந்த 4 பேர், முகமது யாசிக்கிடம் சகஜமாக பேசிக்கொண்டிருப்பது போல் இருந்துவிட்டு, திடீரென கத்தியை எடுத்து அவரை குத்த தொடங்கினர். இதனால் அதிர்ச்சியான முகமது யாசிக், ஹோட்டலில் அங்கும் இங்குமாக ஓடிய நிலையில், இறுதியாக ஓரிடத்தில் சிக்கிக்கொண்டார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அபரை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் சராமரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்,
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த முகமது யாசிக், ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில், அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் நடந்த இந்த படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோட்டல் ஊழியரான முகமது யாசிக் கொலை செய்யப்படுவதற்கு காரணம் என்ன? அவரை கொலை செய்தது யார் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த கொலை நடந்தபோது ஹோட்டல் அறையில் பதிவான சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“