கோவையில் விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்த பின், தாயின் உடலுறுப்புகளை மகள்கள் தானம் செய்ய முன்வந்த சம்பவம் நடந்துள்ளது.
Advertisment
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மனைவி வித்யா. ராமலிங்கம் ஏற்கனவே உயிரிழந்தவிட்ட நிலையில் வித்யா அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் சம்பவத்தன்று வித்யா தனது மொபட்டில் சத்தியமங்கலம் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வித்யா சென்ற மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வித்யா பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக கோவையில் உள்ள குமரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை அவசர பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று வித்யா மூளைச்சாவு அடைந்தார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த போது அவர்கள் வித்யாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்துள்ளனர்.
இதையடுத்து மருத்துவர்கள் வித்யாவின் உடல் உறுப்புகளை தானம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வித்யாவிடம் இருந்து கண், நுரையீரல், இதயம், சிறுநீரகம், தண்டுவடம் ஆகியவற்றை தானமாக பெற்றனர். நோயாளிகளின் தேவைகளை ஆராய்ந்து வைத்திருந்ததை தொடர்ந்து வித்யாவின் உடல் உறுப்புகள் சென்னை மற்றும் கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.
Advertisment
Advertisements
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனை தலைவர் மருத்துவர் ஹரிபிரசாத் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சந்தானம் ஆகியோர் கூறுகையில்,
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில் விபத்தில் சிக்கி தாய் மகள் ஆகியோர் படு காயங்களுடன் தங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் தாய் வித்யா தலையில் படுகாயமடைந்ததன் காரணமாக மூளைச்சாவு அடைந்தாகவும் மகள் லேசான காயமடைந்ததால் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் வித்யா மூளைச்சாவு அடைந்த சம்பவத்தை அவரது பெற்றோர் மற்றும் மகள்களிடம் கூறிய நிலையில் அவர்களாகவே உடல் உறுப்பு தானம் செய்ய முன் முன்வந்தனர்.
இதனைத் தொடர்ந்து வித்யாவின் தண்டுவடம் கோவை கங்கா மருத்துவமனைக்கும், கண் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் தங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சையில் உள்ள நோயாளி ஒருவருக்கும், நுரையீரல்,இதயம்,கல்லீரல் ஆகியவை சென்னையிலுள்ள மருத்துவமனைகளுக்கும் பாதுகாப்பாக வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் தாய் மகள் ஆகியோருக்கு சிகிச்சை கட்டணம் இலவசமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
இது குறித்து இறந்த வித்யாவின் தாய் கூறுகையில், தங்கள் மகள் உயிரிழந்த நிலையில் அவரது உறுப்புகள் ஆறு பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது மகிழ்ச்சி. ஏற்கனவே தந்தை இல்லாமல் தற்போது தாயையும் இழந்துள்ள இரண்டு பெண்களுக்கும் அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
பி.ரஹ்மான் கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news