Tamilnadu Delta Plus Virus Infection Update : இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வந்த நிலையில், மத்திய மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்தியாவில் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ள நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து அடுத்து, டெல்டா பிளஸ் பாதிப்பு மக்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பு குறித்து மக்களுக்கு முன்னேச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. நுரையீரல் அணுக்களுடன் எளிதாக தாக்க்க்கூடிய இந்த வைரஸ், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வருகிறது. தற்போதுவரை இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 20 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்ட பதிவில், டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவல் கவலை அளிக்கு விஷயம் கூறியது.
இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும், பின்பற்றி டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil