இமானுவேல் சேகரன் நினைவு மணிமண்டபத்திற்கு எதிர்ப்பு: பரமக்குடியில் தேவேந்திர குல சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்!

இமானுவேல் சேகரன் மணிமண்டபம் தொடர்பான அரசாணையை ரத்த செய்யக்கோரி ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இமானுவேல் சேகரன் மணிமண்டபம் தொடர்பான அரசாணையை ரத்த செய்யக்கோரி ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Paramakudi Protest

இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தொடர்ந்த ஆப்பநாடு மறவர் சங்கத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறி, தேவேந்திர பண்பாட்டு கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த மணிமண்டபம் தொடர்பான அரசாணையை ரத்த செய்யக்கோரி ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில், பொதுச்செயலாளர் குணசேகரன், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பான தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடியில் நினைவிடம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த நினைவு மண்டபம் கட்ட தேர்வு செய்திருக்கும் இடம் பொதுமக்கள் வாரச்சந்தை நடத்தும் இடம். நினைவு மண்டபத்துக்காக இந்த இடத்தை கையகப்படுத்தினால் சாதாரண வியாபாரிகள் பாதிக்கப்படுவர். மேலும் இம்மானுவேல் சேகரன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல. அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் உரிமைக்காக போராடிய தலைவர்.

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக மட்டுமே பொதுப்பணத்தை பயன்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கான ஏராளமான திட்டங்கள் கிடப்பில் உள்ளன. நிதி ஒதுக்கப்படாமல் பல்வேறு திட்டங்கள் பாதியிலேயே நிற்கின்றன. இதனால் நினைவு மண்டபம் கட்ட இந்த இடத்தை கையகப்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

Advertisment
Advertisements

இதனிடையே, இமானுவேல் சேகரன் நினைவு மண்டபம் கட்ட தடை விதிக்க கோரிய ஆப்பநாடு மறவர் சங்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி தேவேந்திர பண்பாட்டுக்கழகத்தினர் இன்று பரமக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேவேந்திர குலவெள்ளார் சமூகத்தினர் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. இந்த வழக்குகளில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தாலும், தடையை மீறி போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறி, இன்று பரமக்குடியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டக்காரர்கள் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: