/indian-express-tamil/media/media_files/gyTboos2Px9C4en6tgZT.jpg)
பல கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் வேறொருவர் பெயருக்கு மாற்றி பதிவு செய்தாக சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டி.ஐ.ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில், சேலம் சரக டி.ஐ.ஜி.யாக இருப்பவர் ரவீந்திரநாத். இவர் சென்னையில் நிர்வாக பிரிவு மாவட்ட பதிவாளராக இருந்தபோது, தாம்பரம் வரதராஜபுரத்தை சேர்ந்த, சையது அமீன் என்பவருக்கு சொந்தமான ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம், காந்தம்மாள் என்பவரின் பெயருக்கு பத்திரபதிவு செய்து கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசார், பத்திரபதிவு உதவியாளர்கள், மற்றும் சார்ப்பதிவாளர் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் ரவீந்திரநாத் தான் இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சேலத்தில் இருந்த ரவீந்திரனை சென்னைக்கு அழைத்து விசாரித்த நிலையில், தற்போது அவரை கைது செய்துள்ளனர்.
இதனிடையே கோவையில், ரூ300 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்றதாக, அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கோவையில் சார்ப்பதிவாளராக இருந்த மணிமொழியான், மற்றும் உதவியாளர்கள் லதா, சபரீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மணிமொழியனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் தான் தாம்பரத்தில், சார்ப்பதிவாளராக இருந்தபோது ரூ300 கோடி மதிப்புள்ள நிலத்திற்கு, அடமான பத்திரத்தை நீக்கிவிட்டு, ஏற்கனவே கிரையம் செய்ததுபோல் போலி ஆவணங்களை சேர்த்ததாகவும், அதை வில்லங்க சான்றிதழில் திருத்தம் செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் மணிமொழியான் செய்த இந்த வேலைக்காக, அப்போது சென்னையில், மாவட்ட நிர்வாக பதிவாளராக இருந்த ரவீந்திரநாத், 8 முறை வில்லங்க சான்றிதழில் திருத்தம் செய்ய அனுமதி அளித்து இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள ரவீந்திரநாத்திடம் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.