திண்டுக்கல், மாவட்டம் வத்தலகுண்டு சவுத் லயன்ஸ் கிடா முட்டு சங்கம் சார்பில் தென் மாவட்ட அளவிலான கிடா முட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட கிடாய்கள் ஆவேசமாக மோதின.
களத்தில் விடப்பட்ட கிடாய்கள் ஒன்றோண்டொன்று பலமாக மோதின. அதிக நேரம் களத்தில் நீடித்த மற்றும் எதிர் கிடாயை தோற்கடித்த கிடாய்களுக்கு கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன், 60 முட்டுகளுக்கு மேல் மோதியும் களத்தில் உறுதியாக நின்ற இரண்டு கிடாய்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
/indian-express-tamil/media/media_files/2025/03/14/goadt-556872.jpg)
போட்டிக்கு முன்பாக, போட்டியில் பங்கேற்கும் கிடாய்களின் உடல் நிலை மற்றும் ஆரோக்கியம் முழுமையாக பரிசோதிக்கப்பட்டது. இந்த தகுதிநிலை பரிசோதனைக்கு பின் மட்டுமே போட்டியில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. போட்டி வெற்றிகரமாக நடைபெற்றதற்காக சவுத் லயன்ஸ் கிடா முட்டு சங்கம் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.