மாணவிக்கு பாலியல் தொல்லை : இயக்குநர் ஷங்கரின் மருமகன் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

Tamilnadu Updates : மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இயக்குநர் ஷங்கரின் மருமகன் கிரிக்கெட் வீரர் ரோஹித் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tamilnadu News Update : தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரன். டிஎன்பிஎல் மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் மீது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் துத்திப்பட்டு கிராமத்தில் புதுச்சேரி கிரிக்கெட் கிளப் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மைதானம் நீர்நிலைகளை ஆக்கிரமித்து  அமைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து  மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து புதுச்சேரி முத்திரைப்பாளையம் இளங்கே அடிகள் பள்ளி மைதானத்தில் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது புதுச்சேரி கிரிக்கெட் கிளப்புக்கு சொந்தமான துத்திப்பட்டு மைதானம் திறக்கப்பட்டுள்ள நிலையில் வீரர்கள் பயிற்சி இந்த மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இளங்கே அடிகள் பள்ளி மைதானத்தில் பயிற்சி நடைபெற்ற போது, பயிற்சியாளர் தாமரைக்கண்ணன், பள்ளி மாணவி ஒருவரிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி அந்த சிறுமி கிரிக்கெட் கிளப்பில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பயிற்சியாளரிடம் மோதல் வேண்டாம் என்றும் அவரை அனுசரித்து செல்லுமாறும் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி இது தொடர்பாக புதுச்சேரி குழந்தைகள் நல குழுவிடம் புகார் கூறியுள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட அக்குழு இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்காததும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன், கிரிக்கெட் வீரர், ஜெயக்குமார், கிளப் தலைவர் தாமோதரன், கிரிக்கெட் கிளப் கேப்டன் ரோஹித் தாமோதரன், செயலாளர் வெங்கட் ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் கிரிக்கெட் கிளப் கேப்டன் ரோஹித் தாமோதரன், தமிழக் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் ஷங்கரின் மருமகன் ஆவார். ஷங்கரின் மூத்த மகளுக்கும் இவருக்கும் சமீபத்தில்  திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சினிமா மற்றும் அரசியலின் முக்கிய பிரமுகர்கள்  கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu director shankar son in law pocso act for sexual harassment

Next Story
உள்ளாட்சியில் உள்குத்து; சுயேட்சையாக மாறி நின்ற திமுகவினர்: அதிரடி ஆக்ஷனுக்கு ஸ்டாலின் உத்தரவுDMK president CM MK Stalin, MK Stalinorder to take action against rebels of dmk, rural local body polls, உள்ளாட்சியில் உள்குத்து, சுயேட்சையாக மாறி நின்ற திமுகவினர், திமுக, ஸ்டாலின் உத்தரவு, DMK, local body elections result, tamil news, tamil nadu news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express