Coimbatore, Madurai, Trichy News Highlights: முருக பக்தர்கள் மாநாடு - அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

Coimbatore, Madurai, Trichy News Live- 1 July 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 1 July 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Annamalai

இளைஞர் மரணம்- கைதான 5 போலீசாருக்கு 15 நாள் காவல்: திருப்புவனம் இளைஞர் மரண வழக்கில் கைதான 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். மரண வழக்கு தொடர்பாக, அதிகாலை 4 மணி வரை ஆவணங்கள் தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் 5 பேரையும் வேனில் ஏற்றி, திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் போலீசார் ஆஜர் செய்தனர். இதனையத்தொடர்ந்து 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

  • Jul 01, 2025 21:22 IST

    குரங்கு கடித்ததில் 3 வயது குழந்தை காயம்

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் குரங்கு கடித்ததில் மூன்று வயது குழந்தை காயமடைந்தது. குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குரங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று வனத்துறைக்கு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



  • Jul 01, 2025 20:14 IST

    அஜித் குமார் சம்பவத்தில் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம் - இ.பி.எஸ்

    அஜித் குமார் சம்பவத்தில் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, "நடக்கக் கூடாதது நடந்துடுச்சு என்று சொல்ல நா கூசவில்லையா உங்களுக்கு? இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25-வது முறை!" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த அறிக்கையை தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 



  • Advertisment
  • Jul 01, 2025 20:04 IST

    அண்ணாமலை மீது வழக்குப் பதிவு

    மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் பேசியது தொடர்பாக முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, காடேஸ்வர சுப்ரமணியம் உள்ளிட்டோர் மீது மாநகரக் காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, மத ரீதியாக பேசி பகைமையை உருவாக்குதல், மத உணர்வுகளை புண்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 01, 2025 19:59 IST

    அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம் - ஸ்டாலின் அறிக்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கின் விசாரணை சி.பி.ஐ-க்கு மாற்றம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 



  • Advertisment
    Advertisements
  • Jul 01, 2025 19:27 IST

    "சத்துணவில் விஷம் வைப்பேன்" - சமையலர் மிரட்டல்?

    "சத்துணவில் விஷம் வைத்து கொன்று விடுவேன்" என மாணவ, மாணவிகளை மிரட்டியதாக சமையலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, புதுக்கோட்டை உசிலங்குளம் மாநகராட்சி  தொடக்கப் பள்ளியை பெற்றோர் முற்றுகைஇட்டுள்ளனர். 



  • Jul 01, 2025 18:54 IST

    அஜித் குமார் மரணம் - 'யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு': ஸ்டாலின் பதிவு

    "திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு. கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Jul 01, 2025 18:42 IST

    பரமக்குடி - ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு நல்ல செய்தி. பரமக்குடி - ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும், பொருளாதார வளர்ச்சியையும் சுற்றுலாவையும் அதிகரிக்கும் என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Jul 01, 2025 18:40 IST

    அஜித்குமார் குடும்பத்துக்கு ஸ்டாலின் ஆறுதல் 

    காவல் துறை விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். திருப்புவனம் அருகே காவலாளி அஜித் குமார் காவல் நிலையிலத்தில் போலீசார் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அஜித் குமாரின் தாயார், சகோதரரை சந்தித்து அமைச்சர் பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆறுதல் தெரிவித்தனர். அப்போது அரசின் நிவாரணங்களை உடனடியாக கிடைக்க ஏறு்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

    இந்நிலையில், அஜித் குமாரின் தாயார், சகோதரனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். இது தொடர்பாக அஜித்தின் தாயார் பேசுகையில், 'முதல்வர் எங்களிடம் வருத்தம் தெரிவித்தார். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்' என தெரிவித்துள்ளார்.



  • Jul 01, 2025 17:28 IST

    முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையின் கிழக்கு - மேற்கு கால்வாயில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

    முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையின் கிழக்கு - மேற்கு கால்வாயில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு. வழக்கமாக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அணையில் நீர் இருப்பு முழுவதும் உள்ளதால் முன்கூட்டியே திறப்பு. முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் வெளியேற்றம். இந்த தண்ணீர் மூலம் ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளையும் நிரப்புகிறது



  • Jul 01, 2025 17:24 IST

    அஜித்குமார் மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளார்: நீதிபதிகள்

    அஜித்குமார் மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளார், இந்த வழக்கை பொறுத்தவரை இது தான் நீதிமன்றத்தின் கருத்தாக உள்ளது. கொலை செய்பவர்கள் கூட இது போல தாக்க மாட்டார் என  நீதிமன்றம் கருதுகிறது. சிசிடிவி காட்சி பதிவுகளில் 
    மாற்றம் செய்யவோ, அழிக்கவோ கூடாது. மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும்; நீதிபதி விசாரணை என்றால் நீதி விசாரணை என்றே அழைக்கப்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.



  • Jul 01, 2025 16:40 IST

    பெண் தற்கொலை - சந்தேக மரணம் என போலீஸ் விசாரணை

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் திருமணமாகி 4 நாட்களில் பெண் தற்கொலை செய்த விவகாரத்தில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னேரி சார் ஆட்சியரும் விசாரணை பெண்ணின் பெற்றோர் சார்பில் வரதட்சணை கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது



  • Jul 01, 2025 16:40 IST

    மதுரை மாவட்ட நீதிபதி நீதி விசாரணை மேற்கொள்ள உத்தரவு

    இளைஞர் அஜித் மரண வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி நீதி விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இளைஞர் அஜித்குமார் மரண வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நீதி விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிருகத்தனமாக தாக்கப்பட்டு அஜித் இறந்துள்ளார் என்பது உடற்கூராய்வு அறிக்கையில் தெரிகிறது. கொலை செய்பவர் கூட இதுபோல தாக்க மாட்டார்கள் என நீதிமன்றம் கருதுகிறது. காவல் நிலையம், கோயில் என வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து சிசிடிவி காட்சிகளும் பாதுகாக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.



  • Jul 01, 2025 16:36 IST

    "இளைஞர் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற ஆட்சேபனை இல்லை"

    இளைஞர் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற எந்த ஆட்சேபனையும் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அஜித்குமாரை அடிப்பதற்காக பைப், கம்புகள், மிளகாய்ப் பொடி பயன்படுத்தப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி அனைத்து சாட்சியங்களையும் முறையாக சேகரித்ததாக தெரியவில்லை. சட்டவிரோத மரணத்துக்கு காரணமான உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இளைஞர் மரண வழக்கில் அரசு நேர்மையாக உள்ளது; யாருக்கும் சாதகமாக இல்லை என்றும், வழக்கை சிபிஐக்கு மாற்ற எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 01, 2025 16:06 IST

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65,000 கனஅடியாக அதிகரிப்பு

    ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனையடுத்து, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.



  • Jul 01, 2025 16:01 IST

    பரமக்குடி - ராமநாதபுரம் 4 வழிச்சாலை அமைக்க ஒப்புதல்

    NH-87ல் பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 46.7 கி.மீ. தூரத்திற்கு ரூ.1,853 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ராமநாதபுரம்-தனுஷ்கோடி சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற திட்ட அறிக்கை தயாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 01, 2025 15:32 IST

    அஜித்குமார் மரண வழக்கு - விசாரணை மீண்டும் தொடக்கம்

    இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு பற்றிய விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் தொடங்கியுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் அருள் சுந்தரேஷ்குமார் தாக்கல் செய்துள்ளார்.

     



  • Jul 01, 2025 15:31 IST

    சிவகங்கை: மடப்புரம் கோவில் பகுதியில் மீண்டும் திருட்டு

    ஆட்டோவில் வைத்திருந்த ஆவணம், பணம் உள்ளிட்டவற்றை வைத்திருந்த பைகள் திருடப்பட்டு உள்ளன. இதுபற்றி புகார் அளிக்கப்பட்டது. இன்று மட்டும் 3 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ள நிலையில், அடுத்தடுத்து திருட்டு பற்றிய சம்பவங்கள் வெளிவந்துள்ளன.



  • Jul 01, 2025 14:58 IST

    கனிம வளங்கள் நம் நாட்டின் சொத்து: ஐகோர்ட் கிளை

    திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சட்டவிரோத குவாரிகளை பூட்டி உடனடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கனிம வளங்கள் நம் நாட்டின் சொத்து, அதை பாதுகாப்பது ஒவ்வொரு அதிகாரிகளின் கடமை என்றும் ஐகோர்ட் கிளை குறிப்பிட்டுள்ளது.



  • Jul 01, 2025 14:58 IST

    அஜித் மரண வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை: ரகுபதி

    இளைஞர் அஜித் மரண வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் அஜித் மரண வழக்கிலும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.



  • Jul 01, 2025 14:54 IST

    சிவகங்கை இளைஞர் மரணம் - டி.எஸ்.பி. பணியிடை நீக்கம்

    போலீசார் விசாரணையில் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்த விவகாரம் குறித்து மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். 



  • Jul 01, 2025 14:29 IST

    சிங்கம்புணரியில் காருக்குள் மூச்சுத்திணறி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் கைது!!

    சிங்கம்புணரியில் ஜெஸ்ரில் பள்ளியில் காருக்குள் மூச்சுத்திணறி 2ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கமான பள்ளி வாகனத்தில் இல்லாமல் காரில் அழைத்துச்செல்லப்பட்ட 7 வயது சிறுவன் அஸ்வின், கீழே இறக்கிவிடாமல் காரின் உள்ளேயே வைத்து கதவை பூட்டிச் சென்றதால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். பள்ளி தாளாளரின் கணவர் சங்கர நாராயணன், அவரது மகன் மகேஷ் குமார், கார் ஓட்டுநர் ஜான் பீட்டர் கைது செய்யப்பட்டனர்.



  • Jul 01, 2025 14:11 IST

    திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!!

    திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரி தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது; நாங்கள் நிபுணர்கள் அல்ல; கோயில் அமைத்த நிபுணர் குழுதான் குடமுழுக்கு நேரத்தை முடிவு செய்துள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காலை 6-6.50 மணிக்குள் குடமுழுக்கிற்கு நேரம் குறிக்கப்பட்டுள்ள நிலையில் 12.05 – 12.47க்குள் நடத்தக்கோரி சிவராம சுப்ரமணிய சாஸ்திரி மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.



  • Jul 01, 2025 14:02 IST

    அஜித்குமார் லாக் அப் மரணம் வழக்கு: கடும் உத்தரவு பிறப்பிப்போம் - ஐகோர்ட் எச்சரிக்கை

    சிவகங்கை இளைஞர் அஜித்குமார் போலீஸ் சித்ரவதை வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மாநில அரசு செயல்பட்டால் கடும் உத்தரவைப் பிறப்பிப்போம் என்று  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.



  • Jul 01, 2025 13:59 IST

    அஜித்குமாரை கட்டிப்போட்டு போலீஸ் ரவுடி மாதிரி அடித்திருக்கிறார்கள் - எவிடென்ஸ் கதிர் ஆவேசம்

    காவல்துறை வேனில் வந்த போலீசார் யாருமே யூனிபார்மில் இல்லை. அஜித்குமாரை கட்டிப்போட்டு ரவுடி மாதிரி அடித்து, மிளகாய் தூளை அள்ளிப் போட்டிருக்கிறார்கள்" என மனித உரிமை செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

    மனித உரிமைகள் செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், "காவல்துறை வேனில் வந்த போலீசார், சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அஜித்குமாரைக் கட்டிப்போட்டு, ரவுடிகள் போலத் தாக்கியுள்ளனர். இதெல்லாம் என்ன சிஸ்டம்? அஜித்குமாரை அடித்து கீழே தள்ளி செருப்புக் காலால் நெஞ்சை மிதித்துள்ளனர். வாயில் மிளகாய் தூளை அள்ளிப் போட்டிருக்கிறார்கள். இதை நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்" என்று ஆவேசமாகக் கூறினார்.



  • Jul 01, 2025 13:55 IST

    அரசாங்கம் கொலை செய்தால் ஏன் கொலை வழக்காக பதிவு செய்வதில்லை -   எவிடென்ஸ் கதிர்  

    வகங்கை இளைஞர் அஜித்குமார் போலீஸ் சித்ரவதை மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, மனித உரிமைகள் செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், “தனிநபர் கொலை செய்தால் கொலை வழக்காக பதிவு செய்கிறீர்கள், அரசாங்கம் கொலை செய்தால் ஏன் கொலை வழக்காக பதிவு செய்வதில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகள் கன்காணிப்பில் சி.பி.ஐ விசாரணை தேவை” என தெரிவித்துள்ளார்.



  • Jul 01, 2025 13:13 IST

    சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் பிரம்பால் தாக்கும் வீடியோ வெளியானது 

    சிவகங்கை இளைஞர் அஜித் குமார் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக FIR-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கும் வீடியோ வெளியானது.



  • Jul 01, 2025 12:33 IST

    பிரேத பரிசோதனை அறிக்கையை அளிக்காதது ஏன்? - ஐகோர்ட் கேள்வி

    பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு ஏன் இன்னும் அளிக்கவில்லை?' யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டி.ஜி.பி பதிலளிக்க வேண்டும். சிவகங்கை மாவட்ட எஸ்பியை ஏன் இடமாற்றம் செய்தீர்கள்? சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும் என ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்



  • Jul 01, 2025 12:29 IST

    சிவகங்கை இளைஞர் லாக் அப் மரணம்; முழுமையான விவரங்களை மறைக்கக் கூடாது  - ஐகோர்ட்

    சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மரணம் தொடர்பான வழக்கில், மதுரை உயர் நீதிமன்றக் கிளை, காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

    நீதிமன்றம் தனது கேள்விகளில், "நகை காணாமல் போன ஒரு வழக்கு யாருடைய உத்தரவின் பேரில் தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது? உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற முழுமையான விவரங்களை மறைக்கக் கூடாது" என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், "காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முறையாக வேலை செய்கின்றனவா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. திருட்டு வழக்கில் ஒருவர் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்; புலனாய்வு செய்வதற்கே காவல்துறை; அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? - உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை

    இந்த வழக்கில், "திருட்டு வழக்கில் ஒருவர் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். காவல்துறை புலனாய்வு செய்வதற்காகவே இருக்கிறதே தவிர, அடிப்பதற்கு எதற்கு?" என்று உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது. இந்த மரண வழக்கில் வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய விசாரணையை உறுதி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுவதையும், குற்றச் செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.



  • Jul 01, 2025 12:02 IST

    சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    திருப்புவனம் : போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில்  சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்



  • Jul 01, 2025 11:27 IST

    காவலர்கள் குடும்பத்தினர் தர்ணா

    திருப்புவனம்: இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம்; கைது செய்யப்பட்ட 5 காவலர்களின் குடும்பத்தினர் திருப்புவனம் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம்



  • Jul 01, 2025 11:26 IST

    காவலர்கள் சிறையில் அடைப்பு

    திருப்புவனம் : போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்



  • Jul 01, 2025 10:43 IST

    திருவண்ணாமலையில் ஒரே நாளில் இருவர் கொலை

    திருவண்ணாமலையில் காந்திநகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் ராமு என்பவரும், அண்ணாநகர் பகுதியில் சுனில் என்ற நபரும் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர்.

    சுனில் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் கமுதியை சேர்ந்த கோட்டை முத்து என்பவர் கைது. ஆட்டோ ஓட்டுநர் ராம் கொலை வழக்கில் 3-க்கும் மேற்பட்டோரை கைது செய்து திருவண்ணாமலை கிழக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jul 01, 2025 10:41 IST

    திருப்புவனம் இளைஞர் லாக்கப் மரணம்: சிபிஐ விசாரணை தேவை- இ.பி.எஸ். வலியுறுத்தல்

    திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும்''

    எடப்பாடி பழனிசாமி

    வலியுறுத்தல்



  • Jul 01, 2025 10:31 IST

    திருப்புவனம் இளைஞர் லாக்கப் மரணம்: வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

    சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த 28 வயதான அஜித்குமார், ஒரு திருட்டு வழக்கு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, நேற்று இரவு (ஜூன் 30) 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.



  • Jul 01, 2025 09:45 IST

    கொடைக்கானலில் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை

    கொடைக்கானல் மலை பகுதியில் இன்று முதல் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் கனரக வாகனத்தை இயக்குபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எடுத்துவரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • Jul 01, 2025 09:15 IST

    சிவகாசி: பட்டாசு ஆலை வெடி விபத்து- 5 பேர் பலி

    சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் (கோகுலேஸ்) தனியார் பட்டாசு ஆலையில் நடந்த பயங்கர வெடி விபத்தில் ஒரு பெண் தொழிலாளி உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் வெடி விபத்தைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்துள்ளனர். பட்டாசு ஆலையில் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துச் சிதறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 



  • Jul 01, 2025 09:14 IST

    ஒகேனக்கல் காவிரியாற்றில் 5வது நாளாக குளிக்க தடை

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துவரும் நிலையில், தீவிர பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும், அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டடுள்ளது.



  • Jul 01, 2025 09:13 IST

    ஊட்டி சுற்றுலா தலங்களில் படப்பிடிப்புக்கு தடை நீக்கம்

    கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 7 முக்கிய சுற்றுலா தலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை என 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது கோடை சீசன் நிறைவடைந்ததால் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் படப்பிடிப்பிற்கான தடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பூங்காக்களில் படப்பிடிப்பிக்கு அனுமதி தேவைப்படுபவர்கள் அலுவலகத்தை அணுகி கட்டணத்தை செலுத்தி படப்பிடிப்புகள் நடத்தலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



  • Jul 01, 2025 09:13 IST

    ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 7 பேர் கைது - அதிர்ச்சி

    இன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஆரோக்கியா டேனியல் என்பவரின் படகில் இருந்த மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அந்த படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே 8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: