Coimbatore, Madurai, Trichy News Updates: சட்டவிரோத மீன்பிடி - தரங்கம்பாடி மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Coimbatore, Madurai, Trichy News Live- 2 August 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 2 August 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tharangambadi fishermen protest

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை:  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று (ஆக.2) டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை புதுக்கோட்டை மற்றும் கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Aug 02, 2025 14:11 IST

    சட்டவிரோத மீன்பிடி - தரங்கம்பாடி மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் 

    தரங்கம்பாடி சுற்றுவட்டார மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுருக்குமடி, இரட்டைமடி வலை, அதிவேக எஞ்சினை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கத் தவறிய அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், சின்னமேடு, வானகிரி உள்ளிட்ட கிராம மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மீன்வளத்துறை மாவட்ட உதவி இயக்குநர், தரங்கம்பாடி வட்டாட்சியர் உள்ளிட்டோர் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.



  • Aug 02, 2025 13:23 IST

    சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு நிவாரண நிதி

    திண்டிவனம் இறையனூர் அருகே சாலை விபத்தில் மரணமடைந்த திமுக உறுப்பினர் சரிதா குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையினை அவரது கணவர் கண்ணனிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 



  • Advertisment
  • Aug 02, 2025 13:17 IST

    மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்

    நாகை வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  3 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். 



  • Aug 02, 2025 13:04 IST

    தரங்கம்பாடி சுற்றுவட்டார மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

    தரங்கம்பாடி சுற்றுவட்டார மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுருக்குமடி, இரட்டைமடி வலை, அதிவேக எஞ்சினை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கத் தவறிய அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், சின்னமேடு, வானகிரி உள்ளிட்ட கிராம மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மீன்வளத்துறை மாவட்ட உதவி இயக்குநர், தரங்கம்பாடி வட்டாட்சியர் உள்ளிட்டோர் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.



  • Advertisment
    Advertisements
  • Aug 02, 2025 12:57 IST

    வறண்ட தென்கல் கண்மாய்

    மதுரை, திருப்பரங்குன்றத்தில் உள்ள தென்கல் கண்மாய் வறண்டுவிட்டது. இதனால் தண்ணீருக்காக கண்மாயை நம்பி இருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். 377 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கண்மாய், இந்த ஆண்டு தீவிர வெப்ப அலை காரணமாக வறண்டு போன மதுரையின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றாகும்.



  • Aug 02, 2025 12:52 IST

    திமுக எம்.பி- எம்.எல்.ஏ மேடையிலேயே மோதல்

    தேனி ஆண்டிப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் தொடக்க விழாவில் மேடையிலேயே திமுக எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன், திமுக எம்.எல்.ஏ. மகாராஜன் ஒருவரை ஒருவர் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஈடுபட்டது.



  • Aug 02, 2025 12:21 IST

    தூத்துக்குடி சகோத‌ர‌ர்கள் கொலையில் 5 பேர் கைது

    தூத்துக்குடி, கிழக்கு பண்டுகரையில் சகோத‌ர‌ர்கள் அருள்ராஜ், மாரிபாண்டி கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முனீஸ்வரன், காளிராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • Aug 02, 2025 11:07 IST

    4 சவரன் தங்க நகைக்காக மூதாட்டி கொடூர கொலை

    சேலம் சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியில் கறவை மாடு வாங்கி தருவதாக கூறி 70 வயது மூதாட்டியை அழைத்து சென்று நகையை பறித்து கொலை செய்த‌தாக மாட்டு வியாபாரி ஏழுமலை கைது செய்யப்பட்டார்.



  • Aug 02, 2025 10:08 IST

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18,000 கனஅடியாக குறைந்தது

    தற்போது கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து சரிந்தது. அணைகளின் திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஆற்றில் குளிக்க 7-வது நாளாக மாவட்ட ஆட்சியர் சதீஸ் தடை விதித்துள்ளார்.



  • Aug 02, 2025 09:59 IST

    திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு

    ஆடிப்பெருக்கையொட்டி திண்டுக்கல்லில் உள்ள மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகைப் பூ கிலோ ரூ.1,500க்கும், கனகாம்பரம் ரூ.1,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.500க்கு விற்பனையான மல்லிகைப் பூ, தற்போது கிலோ ரூ.1,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. நிலக்கோட்டையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.400க்கு விற்பனையான நிலையில். தற்போது ரூ.900க்கு விற்பனையாகிறது.



  • Aug 02, 2025 09:15 IST

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,744 கனஅடியாக சரிவு

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,374 கன அடியில் இருந்து 5,744 கன அடியாக சரிந்துள்ளது. பாசனத்துக்கு 1,000 கனஅடி அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்துக்கு 800 கனஅடி நீர் திறப்பு. காலிங்கராயன் வாய்க்காலில் 400 கன அடியும், குடிநீருக்காக 100 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.



  • Aug 02, 2025 09:15 IST

    மேட்டூர்: 16 கண் மதகுகள் வழியாக நீர்திறப்பு நிறுத்தம்

    கடந்த 4 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,500 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இரவில் வினாடிக்கு 16,500 கனஅடியாக குறைந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரானது அணையையொட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாகவே திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முதல் நிறுத்தப்பட்டது.



  • Aug 02, 2025 09:15 IST

    மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு: இருவர் கைது

    மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு புகாரில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். வரிவிதிப்பு குழுத் தலைவரான விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். வரிவிதிப்பு முறைகேடு வழக்கில் ஏற்கெனவே 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: