Coimbatore, Madurai, Trichy News: கோவையில் கனமழை - பவானி ஆற்றில் கரைபுரளும் வெள்ளம்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bhavani-river

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 3-வது நாளாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், அதிகபட்சமாக 25.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. எமரால்ட் பகுதியில், 13.2 செ.மீ, குந்தா 11 செ.மீ, சேரங்கோடு 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. செருமுள்ளி, பந்தலூர், பாலகொலா பாடந்தொரை நடுவட்டம் பகுதிகளில் 7 செ.மீ-க்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது,

  • May 27, 2025 19:06 IST

    கோவையில் கனமழை: பவானி ஆற்றில் கரைபுரளும் வெள்ளம்

    நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடர்வதால் 3-வது நாளாக இன்றும் (மே 27) பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.சிறுவாணி அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.



  • May 27, 2025 18:56 IST

    பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து நீர் திறந்து விட உத்தரவு

    திண்டுக்கல்: பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து, தாடாகுளம் கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு, இரண்டாம் போக பாசனத்திற்கு 28.05.2025 முதல் 24.09.2025 வரை 120 நாட்களுக்கு, நீரிழப்பு உட்பட 155.52 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், புதச்சு மற்றும் பாலசமுத்திரம் கிராமத்திலுள்ள 501 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். என்று தெரிவித்துள்ளது.



  • Advertisment
  • May 27, 2025 18:49 IST

    மேல்மலையனூர் கோயிலில் வைகாசி மாத ஊஞ்சல் உற்சவம்

     மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ேகாயிலில் மாதம் தோறும் அமாவாசை நள்ளிரவில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் வைகாசி மாத அமாவாசையான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.



  • May 27, 2025 18:42 IST

    நெல்லை: மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு

    நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • May 27, 2025 17:41 IST

    திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

    திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, உபகார மாதபுரம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த திசையன்விளையைச் சேர்ந்த முத்து இசக்கி மற்றும் கண்ணன் ஆகிய 2 பேரை போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்கள் தடை செய்யப்பட்ட 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.



  • May 27, 2025 17:28 IST

    கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோவில் திருவிழா ஏற்பாட்டின் போது ஃபோகஸ் லைட் கட்டப்பட்டிருந்த கம்பியை பிடித்த போது சுருண்டு விழுந்து கல்லூரி மாணவர் உதயம் உயிரிழப்பு



  • May 27, 2025 15:20 IST

    ராமேஸ்வரம் கோயிலுக்கு ஆளுநர் வருகை தருவதாக தகவல்

    ராமேஸ்வரம் ராமநாத சாமி கோயிலில் வரும் 31-ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



  • May 27, 2025 13:45 IST

    கோவை, நீலகிரியில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு

    கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்று (மே 27) கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • May 27, 2025 12:01 IST

    தொடர் மழை - கொடைக்கானலில்  படகுப் போட்டி ஒத்திவைப்பு

    கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக இன்று நடக்கவிருந்த படகுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. படகுப் போட்டி நடத்தப்படும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 27, 2025 10:58 IST

    வினாத்தாள் கசிவு -  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தேர்வு ஒத்திவைப்பு

    திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் இன்று (மே 27) 'இண்டஸ்ட்ரியல் லா' பாடத்தின் தேர்வு நடக்க இருந்தது.வினாத்தாள் கசிந்ததாக கிடைத்த தகவலை அடுத்து தேர்வு கட்டுப்பாட்டாளர் தேர்வை தற்காலிகமாக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 106 கல்லூரிகளில் இந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வுக்காக மையங்களுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களை திரும்பப்பெறும் பணி நடந்து வருகிறது. வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.



  • May 27, 2025 10:56 IST

    15 மாவட்டங்களில் மழை 

    தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மதியம் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைபெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

     



  • May 27, 2025 10:02 IST

    தென்மேற்கு பருவமழை தீவிரம்: விரைவாக நிரம்பும் சிறுவாணி அனை

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்’ள நிலையில், கோவையின் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 5 நாட்களில், 12 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது, அனையின் நீர்மட்டம் நேற்று 26.55 அடியாக இருந்த நிலையில், இன்று 30.24 அடியாக உயர்ந்துள்ளது. விரைவில், முழு கொள்ளளவையும் (44.61) எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது



Tamil News Live Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: