Tamil Nadu DMK District Councillors Meeting Update : தமிழகத்தில் விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலி்ல் பெரும்பான்மை பெற்ற திமுக 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான கிராமபுற உள்ளட்சி தேர்தலி்ல் பல பகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடினர். இந்நிலையில, தமிழகத்தில் விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற கிராமப்புற உள்ளட்சி தேர்தலில் பெரும்பாலான பகுதிகளில் வெற்றி பெற்ற திமுக நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிகளை குவிக்க தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது . இது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலையத்தில் நடைபெற்றது.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் மட்டுமல்லாது திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
77 மாவட்ட செயலாளர்கள் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 125 சட்டசப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகாண்ட இந்த கூட்டத்தில் வரவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது மற்றும், மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 10 பேர் இருக்க வேண்டும் என்றும், இந்த பூத் கமிட்டியில் 2 பெண்கள் மற்றும் 4 இளைஞர்கள் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு விஷயத்தில், கூட்டணி கட்சிகளுடன் மாவட்ட அளவில் மாவட்ட செயவாளர்களே பேசி உடன்பாடு எட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். கட்சியில் அதிகளவிலான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது மற்றும் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டடதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக முதல்வர் ஸ்டாலின் கடந்த 1989-ம் ஆண்டு சட்டப்பேரவையில் உரையாற்றிய தொகுப்பை தளபதி ஸ்டாலின் சட்டமன்ற உரைகள் என்ற பெயரில் நூலகப்பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil