கட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன் - கு.க செல்வம் : ஹேப்பி மூடில் பா.ஜ.க.
Ku.Ka Selvam : திமுகவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், எம்எல்ஏ ஒருவர் பாஜகவிற்கு ஆதரவாக சட்டசபையில் பேசினால், சட்டசபையே பரபரப்படையும். பாஜகவிற்கு இந்த விஷயம் இப்போதே சந்தோசத்தை அளிப்பதாக உள்ளது
Ku.Ka Selvam : திமுகவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், எம்எல்ஏ ஒருவர் பாஜகவிற்கு ஆதரவாக சட்டசபையில் பேசினால், சட்டசபையே பரபரப்படையும். பாஜகவிற்கு இந்த விஷயம் இப்போதே சந்தோசத்தை அளிப்பதாக உள்ளது
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கு.க செல்வம் சட்டசபையில் தனித்து செயல்பட போகிறேன், கட்சி சார்பற்ற உறுப்பினராக இருக்க போவதாக தெரிவித்துள்ளார்.
Advertisment
பாஜக தலைவர்கள் உடன் நெருக்கமாக செயல்பட்டதாலும், திமுக தலைமையை விமர்சித்ததாலும், திமுகவின் விளக்க நோட்டீஸுக்கு சரியான விளக்கம் அளிக்காத காரணத்தாலும் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கப்பட்டு உள்ளார். ஆனால் இவர் தொடர்ந்து எம்எல்ஏவாக நீடிப்பார். இவர் இன்னும் வேறு கட்சி எதிலும் இணையவில்லை. பாஜகவில் விரைவில் இவர் இணைய வாய்ப்புகள் உள்ளது.
கு.க செல்வம் வேறு கட்சியில் இணையும் முன் அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் திமுக இனி கு.க. செல்வத்தை தகுதி நீக்கம் செய்ய முடியாது. இனி கு.க. செல்வம் சட்டசபையில் தனித்து செயல்படுவார். அடுத்த வருடம் தேர்தல் வரும் வரை கு.க. செல்வம் தனது எம்எல்ஏ பதவியை இழக்க மாட்டார். அதாவது கு.க செல்வம் மீது திமுக கட்சி தாவல் தடை சட்டத்தை பிரயோகிக்க முடியாது.
Advertisment
Advertisements
சட்டசபையில் கட்சி சார்பற்ற உறுப்பினராக செயல்படுவேன்.என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த ஆயிரம் விளக்கு தொகுதி மக்களுக்கு நன்றி. அவர்களுக்காக எப்போது என் பணிகளை செய்வேன். மக்கள் நலனுக்காக என் பணிகள் தொடங்கும் என்று கு. க. செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கு.க செல்வம் அதிகாரபூர்வமற்ற பாஜக உறுப்பினர் போல செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் பாஜகவிற்கு ஆதரவாக பேச வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். திமுகவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், எம்எல்ஏ ஒருவர் பாஜகவிற்கு ஆதரவாக சட்டசபையில் பேசினால், சட்டசபையே பரபரப்படையும். பாஜகவிற்கு இந்த விஷயம் இப்போதே சந்தோசத்தை அளிப்பதாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil