Advertisment

போதை பொருள் அதிகரிப்பு... மத்திய அரசு தான் பொறுப்பு : அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி

போதைப்பொருள் தடுப்பு துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சரகம் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்

author-image
WebDesk
New Update
Kanimozhi PM Covai

கோவையில் கனிமொழி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கூறிவரும் நிலையில், போதை பொருள் தடுப்பு துறை என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என தி.மு.க துணை பொது செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

Advertisment

மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க துணை பொது செயலாளர் கனிமொழி கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கூறுகையில,

திமுக கூட்டனி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவையில் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்பது பிரச்சாரத்தில் தெரிகிறது. 2வது இடத்திற்கு தான் போட்டி இருக்கும் என்பதும் தெளிவாகியுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றிருக்கிறது என்பதால் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டனியில் இருக்கும் இண்டி கூட்டனி ஒன்றியத்தில் உருவாக்க வேண்டும்.

பாஜக மீண்டும் எந்த பொறுப்புக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நிச்சயமாக இந்த கூட்டணி இங்கு மட்டுமின்றி தமிழகத்தில் போட்டியிடும் 40 இடங்களிலும் தெள்ள தெளிவாக இருக்கிறது, ஆயுஷ்மான் திட்டத்தில் ஒன்றிய அரசு ஒரே பெயரில் 10 லட்சம் பயனாளிகளை இணைத்திருப்பதை போல் எங்களுக்கு தெரியாது. மகளிர் உதவி தொகையை ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் அந்த திட்டம் மக்களை சென்று சேர்ந்திருக்கிறது.

இதேபோல் காலை உணவு திட்டம் மக்களுக்கு பெரிய அளவில் சென்று இருக்கிறது. மேலும் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக அண்ணாமலை கூறி வருகிறார். போதைப்பொருள் தடுப்பு துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சரகம் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு மாநில அரசு தயாராக இருக்கிறது.

குஜராத்தில் தான் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த துறைமுகம் யாருடையது என்பது அனைவருக்கும் தெரியும். இதைப்போல் கோவையில் பாஜக 60 சதவிகித வாக்குகள் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று அண்ணாமலை கூறியிருப்பது, 60% வாங்கலாம் 90% கூட வாங்கலாம் என கனவு காண்பது அவரது உரிமைஇ ஆனால் வெற்றியை நிச்சயமாக எங்களது வேண்டியனவும் நம்பிக்கை தெரிவித்தார். ஒரு பைசா கூட ஓட்டுக்கு  செலவழிக்க மாட்டேன் என்று அண்ணாமலை கூறுகிறார்

பின்னர் எதற்காக அவ்வளவு கோடிக்கு தேர்தல் பத்திரங்கள்  வாங்கினார்கள். அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் நாங்கள் யாருக்கும் காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் கிடையாது., முதலமைச்சர் திட்டங்களை நம்பித்தான் இங்கே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mp Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment