திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில் இந்தியா கூட்டணி கட்சியின் பெண் தலைவர்களாக, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முக்தி, மற்றும் கனிமொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள திமுக பெண் நிர்வாகிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
மாலை 6 மணியளவில் தொடங்கிய இந்த மாநாட்டில் முன்னதாக பெண் நிர்வாகிகள் பாடல் பாடுவது நடனமாடுவது உள்ளிட்ட நிகழ்வுகள் பங்கேற்று மாநாட்டில் பங்கேற்றது தொடர்பாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து மாநாடு தொடங்கிய நிலையில், முதல் ஆளாக திமுக எம்.பி கனிமொழி பேசினார்.
மகளிர் உரிமை மாநாடு என்பது நமது திராவிட இயக்கத்திலே நூறாண்டு பழமை கொண்டது. தந்தை பெரியார் அவர்கள் நடத்திய மாநாட்டிலே கண்டன கனவுகள் தான் கலைஞரின் ஆட்சி காலத்திலே பெண்களின் கல்வியாக பொருளாதார முன்னேற்றமாக, வேலை வாய்ப்பாக, அரசு பணிகளில் வாய்ப்பாக பெண்களின் வாழ்க்கையையே மாற்றிய சாதனையாக மிளிர்ந்தது.
இந்த சமூகத்தில் பேசக்கூடிய எல்லோரும், ஒரு பெண்ணுக்கு ஆண்தான் பாதுகாப்பு என்று சொல்வார்கள். ஆனால் இந்தியாவிலே முதல் முறையாக காவல்துறையிலே பெண்களுக்கு வாய்ப்பு அளித்து, ஆணுக்கும் பெண்ணால் பாதுகாப்பு அளிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் கலைஞர். அவரின் ஆட்சியின் நீட்சியாக இன்று முதல்வர் ஸ்டாலின் அரசு தொடர்ந்து பெண்களுக்கான வாய்ப்புகளை, பெண்களை காக்கக்கூடிய ஒரு ஆட்சியாக, இருக்கிறது.
பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை விடியல் பயணமாக அறிவித்து, பெண் வீட்டை விட்டு போக கூடாது என்று சொல்ல முடியாத ஒரு நிலையை உருவாக்கி, காட்சியவர் முதல்வர் ஸ்டாலின், படிக்க வேண்டும் என்று கனவோடு இருக்கக்கூடிய பெண்களுக்காக, படித்து முடிக்கும்வரை ரூ1000 ஊக்கத்தொகை வழங்கி வரும் ஆட்சி திமுக ஆட்சி. அதேபோல் உழைக்கும் சிகரங்களாக இருக்கும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 1000 ஊக்கத்தொகை வழங்கிய அரசு. இதுதான் திராவிட மாடல்.
இந்த ஆட்சியில் தான் தமிழகத்தில் 11 பெண் மேயர்கள் இருக்கிறார்கள். பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு. இப்படிப்பட்ட வாய்ப்புகளை எல்லாம் உருவாக்கி தந்துகொண்டுடிருக்கிறது நமது அரசு. ஆனால் ஒன்றிய அரசாங்கத்தில் பிரதமர் மோடி பெண் சக்தி என்று சொல்லி பெருமையாக பேசுவார். பெண் சக்தியை கொண்டாடுகிறோம் என்று பொய் பிரச்சாரங்களை பரப்புகிறார்
சமீபத்தில் ஒரு மகளிருக்கான மசோதாவை கொண்டு வந்தார்கள். 2010-ம் ஆண்டு சோனியாக காந்தி உத்திரபிரதேசத்தில் இந்த மசோதாவை கொண்டு வந்தார். அதன்பிறகு நமது ஆதரவில் அந்த மசோதா நிவேற்றப்பட்டது. ஆனால் இப்போது மகளிர் மசோதாவை கொண்டு வந்துவிட்டோம் என்று பாஜக மார்தட்டிக்கொள்கிறார்கள். ஆனால் 50 ஆண்கள் ஆனாலும் நடைமுறைபடுத்த முடியாத ஒரு மசோதாவை கொண்டு வந்து தேர்தலில் பெண்களை ஏமாற்றுகிறார்கள்.
ஒன்றிய பாஜக ஆட்சியில்எந்த பெண்ணுக்காவது பாதுகாப்பு இருக்கிறதா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். மணிப்பூரில் பலர் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் வாழந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் நாமது தலைவர்கள் அங்கு சென்று பார்த்தபோது பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் அங்கு வாழ முடியாத சூழலில் தான் இருந்துள்ளார்கள்.
அதேபோல் பாஜக செய்த அட்டூழியங்களால் குஜராத் பெரிதும் பாதிக்கப்பட்டது பெண்கள் தான். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் நாட்டின் முதல் குடிமகள் குடியரசு தலைவரையே அவமதிக்கிறார்கள். கோவில் முதல் நாடாளுமன்றம் வரை குடியரசு தலைவரையே யாரும் அனுமதிப்பதில்லை. புதுவையில் அமைச்சராக இருந்த பட்டியலின பெண்னை ராஜினாமா செய்யும் நிலைக்கு கொண்டுவந்தார்கள்.
பாஜக ஆளும் மாநிலங்களில் வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. நாங்கள் உங்களிடம் யாசனம் கேட்கவில்லை. எங்கள் உரிமைகளை கேட்கிறோம். அதற்கு பெண்களாகிய நம் குரல் வலிமையாக இருக்க வேண்டும் என்று கனிமொழி பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“