Advertisment

தி.மு.க எம்.பி - அமைச்சர் இடையே மோதல் : மாவட்ட ஆட்சியரை தள்ளிவிட்டதால் பரபரப்பு

அமைச்சர் மற்றும் எம்பி இருவருக்கும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை தள்ளிவிட்டுள்ளனர்

author-image
WebDesk
New Update
MP Minister

எம்.பி. நவாஸ் கனி - அமைச்சர் ராஜகண்ணப்பன் மோதல்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிக்கான பரிசளிப்பு விழாவழல் எம்.பி நவாஸ் கனி மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் எம்.பி.நவாஸ் கனிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் வருவதற்கு முன்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் விழா தொடங்கியது.

இதனால் கோபமான எம்.பி நவாஸ் கனி இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது அமைச்சர் ராஜகண்ணப்பன் இது குறித்து எம்.பியிடம் கேட்டுள்ளார். இதனால் எம்.பி. நவாஸ் கனி – அமைச்சர் ராஜகண்ணப்பன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவாகரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அமைச்சர் மற்றும் எம்பி இருவருக்கும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தன்னை தள்ளிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே எம்.பி நவாஸ் கனி, அமைச்சர் ராஜகண்ணப்பன் இடையேயான மோதல் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மாவட்ட செயலாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே இருந்த மோதல் தற்போது எம்.பி – அமைச்சர்கள் இடையே வலுவடைந்துள்ளதாக கூறப்படுவது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Taminadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment