Tamilnadu DMK MP Thamizhachi Thangapandian In Oman With Hijab ஹிஜாப் அணிந்து மசூதிக்கு சென்ற தி.மு.க எம்.பி தமிழச்சி: வைரல் போட்டோஸ் | Indian Express Tamil

ஹிஜாப் அணிந்து மசூதிக்கு சென்ற தி.மு.க எம்.பி தமிழச்சி: வைரல் போட்டோஸ்

தற்போது ஓமன் நாட்டிற்கு சென்றுள்ள தமிழச்சி தங்கபாண்டியன், தலைநகர் மஸ்கட்டில் உள்ள சுல்தான் காபூஸ் பெரிய பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார்.

ஹிஜாப் அணிந்து மசூதிக்கு சென்ற தி.மு.க எம்.பி தமிழச்சி: வைரல் போட்டோஸ்

தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் ஹிஜாப் அணிந்துகொண்டு மசூதிக்குள் சென்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். முன்னதாக சார்ஜாவில் நடைபெற்ற அமீரக நாடுகளின் பல்துறை ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது ஓமன் நாட்டிற்கு சென்றுள்ள தமிழச்சி தங்கபாண்டியன், தலைநகர் மஸ்கட்டில் உள்ள சுல்தான் காபூஸ் பெரிய பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். ஓமனின் மிகப்பெரிய பள்ளிவாசலான இங்கு ஆண்களும் பெண்களும் பாரம்பரிய உடை அணிந்து செல்ல வேண்டியது அவசியம்.

அதன்படி ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்துகொண்டு பள்ளி வாசலுக்கு உள்ளே சென்ற தமிழச்சி தங்கபாண்டியன், அங்குள்ள முக்கியமான இடங்களை பார்வையிட்டார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu dmk mp thamizhachi thangapandian in oman with hijab