Advertisment

ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு அரசியல் அனுபவம் இல்லை : முரசொலி கடும் விமர்சனம்

Tamil Nadu News Update : தமிழகம் நாகாலாந்தோ அல்லது பிற மாநிலங்களைப் போல் இல்லை என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி உணர வேண்டும்.

author-image
WebDesk
New Update
டெல்லியில் ஆளுனர் ஆர்.என் ரவி: யாரை சந்திக்கிறார்?

Violent Protest against T.N Governor RN Ravi

Tamilnadu News Update : குடிரசு தின விழாவில் உரையாற்றிய தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி நீட் மற்றும் தமிழகத்தின் மொழிக் கொள்கை தொடர்பாக பேசிய கருத்துக்கள் குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான  'முரசொலி' கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

Advertisment

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஜனவரி 26ந் தேதி நடைபெறற குடியரசு தின விழாவில், பங்கேற்று கொடி ஏற்றி வைத்த ஆளுனர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது, நீட் விலக்கு மற்றும் தமிழகத்தின் மொழிக்காள்கை குறித்து பேசியிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்சசையை ஏற்படுத்திய நிலையில், ஆளுனரின் பேச்சுக்கு திமுகவின் அதிகாரப்பூர் நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.

இது குறித்து முரசொலியில்,

மாநில மாணவர்கள் பிற இந்திய மொழிகளின் அறிவை இழக்கக் கூடாது என்று தமிழக ஆளுனர் சமீபத்தில் கூறியிருந்தார். தமிழகம் நாகாலாந்தோ அல்லது பிற மாநிலங்களைப் போல் இல்லை என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி உணர வேண்டும். நாகாலாந்து ஆளுநராக ரவியின் சாதனைப் பதிவு அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை என்று கூறிப்பிட்ட அம்மாநிலஅரசியல் கட்சி தலைவர் ஒருவர், மாநில மக்கள் அவரது பணியில் திருப்தி அடையவில்லை என்றும் கூறியதாக முரசொலி தெரிவித்துள்ளது.

மேலும் ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு அரசியல் அனுபவம் இல்லை, அரசியல் புரியவில்லை. "தமிழக மக்கள் அரசியலை மிகவும் உன்னிப்பாகக் கவனிப்பவர்கள், ஆளுநர் கருத்து தெரிவிக்க விரும்பினால், அவர் மாநிலத்தின் பிரச்சினை மற்றும் கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு அதைச் செய்ய வேண்டும். தமிழக சட்டமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்திற்கு இன்னும் ஆளுனர் ஒப்புதல் அளிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

publive-image

மேலும் நீட் விலக்கு மசோதா தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில்,  நீட் வருவததற்கு முன்பு, இருந்ததை விட தற்போது நீட் வந்த பிறகு அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ சேர்க்கை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார். ஒட்டுமொத்த தமிழகமும் நீட் தேர்வுக்கு எதிராக நிற்கும்போது, தமிழகத்தின் சட்டப்பேரவையே நீட் தேர்வுக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், இந்த தீர்மானம் அவரது பரிசீலனையில் உள்ள இந்த வேலையில் அவர் இவ்வாறு பேசுவது என்ன நியாயம் என்று கேள்வி எ ழுப்பியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Tamilnadu Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment