எழவே முடியாத கொங்கு மண்டல திமுக: உதயநிதியிடம் பொறுப்புகள் ஒப்படைப்பு?

Udayanithi Kongu Zone : கோவையில் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் படுக்கை வசதியை உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த 16-வது சட்டசபை தேர்தலில், திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன் மூலம் முதல் முறையாக திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், அவருடன் சேர்ந்து அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் தேர்தலிலேயே தனது பலத்தை நிரூபித்துள்ளார்.

இதன் முலம் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று திமுக வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானது. ஆனால் அவர் திரைப்படங்களில் பிஸியாக இருப்பதால் அதனை முடித்தவுடன் அமைச்சர் பதவி வழங்கப்படுமு என்று கூறப்பட்டது. தான் அமைச்சராக இல்லை என்றாலும், எம்எல்ஏ என்ற முறையில் தனது தொகுதயில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து வருவதாக அந்த தொகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

மேலும் தனது தொகுதி மட்டுமல்லாது பிற தொகுதிகளுக்கும் சென்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் உதயநிதி. ஆனால் தமிழக்த்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கடந்த வாரம் ஆவடியில் உதயநிதி கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் தடை விதித்திருந்தார். முதல்வரிள் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது உதயநிதி கோவையில் மருத்துவமனை திறப்புவிழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பெரும் அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் மருத்தவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவையில் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் படுக்கை வசதிகளை உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். தற்போது சாதாரணமாக எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் வெறோரு தொகுதி அரசு விழாவில் கலந்துகொண்டு திறந்து வைப்பது அரிதான நிகழ்வு.

ஆனால் தற்போது உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில கலந்துகொண்டது. கொங்கு மண்டலத்தை உதயநிதி ஸ்டாலினிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மை தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும், கொங்கு மண்டலத்தில் தோல்வியையே தழுவியுள்ளது. மேலும் கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டல தோல்வியே திமுக ஆட்சிஅமைக்கும் வாய்ப்பை இழந்த்தாக கூறப்பட்டுது.

இதனால் கொங்கு மண்டலத்தில் திமுகவின் கைகளை ஓங்க வைக்கவும், அடுத்த தேர்தலில் வெற்றியை நிலைநாட்டவும், கொங்கு மண்டலத்தை உதயநிதி வசம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே முதல் தேர்தலில் போட்டியிட்ட உதயநிதி சென்னை சேப்பாக்கம் தொகுதியில் ஒரு லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே யுக்தியை பயன்படுத்தி அடுத்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெற்றியை பெற இப்போதிருந்தே திமுக நிர்வாகிகளுடன் இணைந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu dmk udayanithi can take kongu zone administrator

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com