Tamilnadu News Update : முதல்வர் ஸடாலினை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று சொல்லி தொண்டர்களின் வாக்குறுதி வழங்கியவர்கள் அதனை நிறைவேற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தர்மபுரி திமுக எம்பி செந்தில் குமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றிய திமுகவுக்கு தேர்தல் நேரத்தில் தொண்டர்கள் பரபரப்பாக இயங்கி வந்தத. அப்போது ஸ்டாலின் அணி என்று தொடங்கப்பட்ட மொபைல் செயலியில், ஸ்டாலினை சநதிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த தொண்டர்களின் பேச்சை நம்பி ஏராளமானோர் அந்த செயலியில் இணைந்துள்ளனர். தற்போது திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நெருங்கியுள்ள நிலையில், தொண்டர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று திமுக தொண்டர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது குறித்து புதுக்கோட்டையை சேர்ந்த திமுக தொண்டர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக அழிந்து போகாதா ஒழிந்து போகாதா என்று ஏங்கியவர்கள் கடந்த 10 வருடமாக திமுக தலைவரை பார்க்க தயங்கியவர்கள் , திமுக வெற்றிக்கு துரும்பை கூட கிள்ளி போடாத 100 கணக்கானவர்கள் திமுக வெற்றிக்கு பிறகு தலைவரை ஈசியாக சந்திக்கின்றனர் ஆனால் தேர்தல் அப்போ கழகம் சொன்னபடி உழைத்து மாவட்ட வாரியாக ஸ்டாலின் அணியில் அதிக எண்களை பெற்ற கழக தொண்டர்களை தலைவர் இன்னும் சந்திக்க வில்லை "சொனனதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்ற கழகம் ஏன் செய்யவில்லை? எப்போது தலைவரே சந்திக்க போறீங்க கட்சியினருக்கு கழகம் கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள் என்று பதிவிட்டுள்ள அவர் இந்த பதிவை முதல்வ ஸ்டாலின் மற்றும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அவர்களையும் டேக் செய்துள்ளார்.
மாவட்ட வாரியாக ஸ்டாலின் அணியில் அதிக எண்களை பெற்ற கழக தொண்டர்களை தலைவர் இன்னும் சந்திக்க வில்லை
"சொனனதை செய்வோம்
செய்வதை சொல்வோம் என்ற கழகம் ஏன் செய்யவில்லை?
எப்போது தலைவரே சந்திக்க போறீங்க கட்சியினருக்கு கழகம் கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள் @mkstalin தலைவரே 🙏🏾@TRBRajaa 2/2 pic.twitter.com/4Ngz3DhKrn— வெற்றிகொண்டான்🖤❤️ (@VetriKondanPDKT) March 12, 2022
இந்த கருத்தக்கு பதில் அளித்துள் சென்னையை சேர்த்த திமுக தொண்டர் அன்பழகன் என்பவர், வெற்றிகொண்டான் கூறுவது உண்மை நாஙகள் அயராது பாடுபட்டு பரப்புரை செய்து கடைசியில் தலைவரை பார்க்க முடியவில்லை. அதுமட்டுமல்ல எங்களுக்கு டி சர்ட கூட தரல தேர்தல் முடிந்து தருவோம் என்று சொன்னார்கள். இந்த அந்த செயலியை போன்லதான் வச்சிருக்கேன் என்றாவது ஒருநாள் நம்மள கூப்பிடமாட்டாங்களாகு என்று பதிவிட்டு தர்மபுரி எம்பி செந்தில்குமாரை டேக் செய்துள்ளார்.
@VetriKondanPDKT கூருவது உண்மை நாங்கள அயராது பாடுபட்டு பரப்புரை செஞ்சி கடைசில தலைவர பாக்கமுடியல.அது மட்டுமல்ல டீசர்ட் கூட தரல தேர்தல் முடிஞ்சி தருவோம்னு சொன்னாங்க.இன்னும் அந்த செயலி போண்ல தான் வச்சிருக்கேன் என்றாவது ஒரு நாள் நம்மள கூப்பிடமாட்ங்களானு😔 @DrSenthil_MDRD அண்னே pls🙏 pic.twitter.com/hlXoCmLwSs
— தமிழ்பிாியன் அன்பழகன் (@TamilDMK13) March 12, 2022
இந்த பதிவை ரீட்விட் செய்து பதில் அளித்துள்ள எம்பி செந்தில்குமார், உங்களுக்கு அப்படி ஒரு வாக்குறுதி அளித்தார்கள் என்றால், அவர்கள் அதை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதனை யார் பொறுப்பேற்றார்கள் என்று தெரிந்தால் சொல்லுங்கள் நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
உங்களுக்கு அப்படி ஒரு வாக்குறுதி அளித்தார்கள் என்றால் அவர்கள் அதை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இதனை யார் பொறுப்பேற்றார்கள் என்று தெரிந்தால் சொல்லுங்கள் நானும் முயன்று பார்க்கிறேன். https://t.co/d6MVI7oNmu— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) March 12, 2022
எம்பியின் இந்த கருத்தக்கு பதில் அளித்துள்ள திமுக தொண்டர் சுரேஷ்குமார், ஏதாவது செய்து தலைவரை பார்க்க நடவடிக்கை எடுங்கள். இது எங்களுக்கு மேலும் கட்சிக்காக உழைக்க உறுதுணையாக இருக்கும். இந்த ஆப் மூலம் பல நண்பர்களை இழந்துள்ளேன். இவை எல்லாம் தலைவரை நேரில் பார்க்க வேண்டும் தளபதி முதல்வராக வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுக்காக மட்டுமே என்று கூறியுள்ளார்.
ஏதாவது செய்து தலைவரை பார்க்க நடவடிக்கை எடுங்கள்....
இது எங்களுக்கு மேலும் கட்சிக்காக உழைக்க உறுதுணையாக இருக்கும்....
இந்த ஆப் மூலம் எனது பல நண்பர்களை இழந்துள்ளேன்...
இவையெல்லாம் தலைவரை நேரில் பார்க்கவேண்டும்,தளபதி முதல்வராக வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோள் மட்டுமே....— தி.பொ.ந.சுரேஷ்குமார்... (@tpnsuresh1975) March 12, 2022
மற்றொரு திமுக தொண்டர் வினோத் என்பவர், , "பிரசாந்த் கிஷோர் கம்பெனி தான். ரீடுவீட் பண்ணுங்க... டுவிட் போடுங்க, முகநூலில் பகிருங்கள், வாட்சப்பில் பகிருங்கள், வாட்சப் டிபி வையுங்கள், டிரெண்ட் பண்ணுங்க புள்ளிகள் கிடைக்கும் முக்கிய தலைவர்கள், கட்சி தலைவரை பாக்கலாம்னு சொல்லி ஏமாற்றிவிட்டார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.