Advertisment

கும்மிடிப்பூண்டி; பவர் கட்; ஆத்திரத்தில் இ.பி ஸ்டேஷனில் புகுந்து ஊழியர்களை தாக்கிய கும்பல்

மின்சாரம் நிறுத்தப்பட்டதால் மின் ஊழியர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
Oct 07, 2023 18:46 IST
New Update
Powercut

மின்தடையால் ஆத்திரம் : ஊழியர்கள் மீது தாக்குதல்

சென்னை கும்மிடிப்பூண்டி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரடைந்த சிலர் மின் வாரிய ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ்நாடு ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தின் கும்மிடிப்பூண்டி அருகே, உள்ள மதர்பாக்கம் என்ற பகுதியில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் ஏற்பட்ட மின் பகுது காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த சில மதுபோதையில் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து அதிகாரி ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில்,  மதர்பாக்கம் பகுதியில் நேற்று இரவு 7.40 மணியளவில் மின்கம்பம் பழுதானதால் சப்ளை துண்டிக்கப்பட்டது. இதை சரி செய்வதற்காக மின்சாரம் நிறுத்தப்பட்டது. அப்போது, சூரப்பூண்டியைச் சேர்ந்த எம்.ரவி மற்றும் சிலர் குடிபோதையில் கட்டுப்பாட்டு அறையைத் தாக்கி துணை மின் நிலையத்தின் சொத்துக்களை சேதப்படுத்தினர்," என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் லைன் இன்ஸ்பெக்டர் எம்.லட்சுமணன் (58), வயர்மேனாக இருந்த எம்.கோதண்டன் (46) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், அவர்களை விசாரித்த மற்றொரு லைன் இன்ஸ்பெக்டர் பரமசிவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்காக மின்வாரிய ஊழியர்களைத் தாக்கியது மற்றும் அவர்களை வேலை செய்ய விடாமல் தடுத்ததற்காகவும் ரவி உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamilnadu #power cut
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment