திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமாக சென்னை பாண்டி பஜாரில் உள்ள நிறுவனத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், தொண்டர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக எம்.பி ஜெகத்ரட்சகளுக்கு சொந்மாக, சென்னை பாண்டி பஜார் திலக் தெருவில் அக்கார்டு டிஸ்டில்லர்ஸ் எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை எழும்பூரில் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள தமிழக டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், எஸ்என்ஜே நிறுவனத்திலும் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் உள்ள எஸ்டிபிஐ அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் மட்டும் 4 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. ஏற்கனவே இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான கொங்கு மெஸ் மணி மற்றும் சக்தி மெஸ் சக்திவேல், பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரருமான எம்சிஎஸ் சங்கர் ஆகியோரின் வீடுகளிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே சட்டவிரோத பணப்பறிமாற்றம் தொடர்பான வழக்கில் சிக்கி ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்த அமைச்சர், செந்தில் பாலாஜி மீது குறி வைப்பதற்காகவே கரூரில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், மும்மொழி கொள்கை தொடர்பான மத்திய அரசுக்கும், தமிழக திமுக அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து. இந்த அமலாக்கத்துறை சோதனை தொடர்பான தகவல்கள் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.