scorecardresearch

கறவை மாடு கேட்ட திருமலை… கணவரை மீட்டு தருவதாக கூறிய ஸ்டாலின் : வைரலாகும் வீடியோ

Stalin Election Campaign : திருவண்ணாமலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலின், மக்களின் மனுக்களை படிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கறவை மாடு கேட்ட திருமலை… கணவரை மீட்டு தருவதாக கூறிய ஸ்டாலின் : வைரலாகும் வீடியோ

Stalin Election Campaign : தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுகான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அதிமுகவை நிரகரிப்போம் என்ற பெயரில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் கிராமசபை கூட்டத்தை நடத்தும் ஸ்டாலின் மக்களின் குறைகளை கேட்டறிந்து வரும் நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனி இலாக்கா அமைத்து மக்களின் குறைகளை 100 நாட்களில் தீர்க்க வழிவகை செய்வோம் என கூறி வருகிறார்.

ஆனால் பிரச்சாரம் மேடைப்பேச்சு என அனைத்திலும் ஸ்டாலின் செய்யும் ஒரு சில செயல் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும். ஏற்கனவே திருத்தணியில் வேல் கொடுத்த விவகாரத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஸ்டாலின் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கிராமசபை கூட்டத்தில் தொழிலாளி ஒருவர் கொடுத்த மனுவை தவறாக படித்து சிக்கலில் சிக்கியுள்ளார். இது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் வலைதளவாசிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வீடியோவில், திருமலை என்பவர் தான் கறவை மாடு தொலைந்துவிட்டதாகவும், தாங்கள் எனக்கு கறவை மாடு வேண்டும் என்று கேட்டு கொடுத்த மனுவை, படித்த ஸ்டாலின், சகோதரி திருமலை கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறார் என்று படித்துள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu election campaign dmk leader stalin in tiruvannamalai

Best of Express