தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா தொற்று பாதிப்பு தனது தீவிரத்தை காட்டி வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 19588 பேருக்கு பதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் அலை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா 2-வது அலை தீவிரமடைய தொடங்கி தற்போது உச்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், வழக்கு விசாரணை ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலைக்கு தேர்தல் ஆணையமே முக்கிய காரணம் என்றும், இதற்காக கொலை வழக்கு பதிவு செய்யலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
நீதிபதியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலை வழக்கு பதியலாம்’ என்ற சொன்ன சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில், இந்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தல் அணையம் இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளர். இந்த வழக்கில், தேர்தல் நேரத்தில் கொரோனா விதிமீறலை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil