scorecardresearch

தமிழக தேர்தல் அதிகாரி கொடுத்த விளக்கம்: அதிமுக-விற்கு புதிய சிக்கல்

இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் கடிதம் அனுப்பப்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக தேர்தல் அதிகாரி கொடுத்த விளக்கம்: அதிமுக-விற்கு புதிய சிக்கல்

இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் கடிதம் அனுப்பப்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை சில மாதங்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த முடிவு பொதுக்குழுவால் எடுக்கப்பட்டது.ஆனால் அதிமுக கட்சி மற்றும் கொடியை வைத்துகொள்ள எங்களுக்கு உரிமை இருப்பதாக பன்னீர் செல்லவம் நீதிமன்றத்திற்கு சென்றார். மேலும் அவரும் பொதுக்குழு ஒன்றை கூட்டி, முடிந்தால் எடப்பாடி பழசாமி தனிக் கட்சி தொடங்கி மக்களை சந்திக்கட்டும் என்று சவால் விடுத்தார். இந்நிலையில் கட்சியின் கொடியை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு அதிமுக தலமையகம்  பன்னீர் செல்வதற்கு கடிதம் அனுப்பியது.

இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரி சத்திய பிரதா சாகு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில்தான் ஒருகிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று பெயரிட்டு கடிதம் அனுப்பி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க தகுந்த ரிமோட் வாக்குப்பதிவு எந்திரத்தை தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ளது. இந்த எந்திரத்தின் செயல்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் எல்லா கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தது. இதன் அறிமுக நிகழ்வு ஜனவரி 16ம் தேதி நடைபெற இருக்கிறது. அதிமுக- விற்கு அனுப்பிய கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று பெயரிடப்பட்டு இருந்ததால், அதிமுக அந்த கடிதத்தை திருப்பி அனுப்பியது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்த தமிழக தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு “ இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் கடிதம் அனுப்பப்பட்டது”  என்று விளக்கம் அளித்துள்ளார்.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu election commission sathya pratha sahoo says ops still in amdk