மாலையில் தேர்தல் அறிவிப்பு… காலையில் கடன் தள்ளுபடி..! கடைசி நிமிட வாய்ப்பையும் விடாத முதல்வர் பழனிசாமி

Agirculture Loan Tamilnadu : தமிழகத்தில் கூட்டுறவு பயிர்க்கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக சட்டசபையில் முதல்வர் அறிவித்துள்ளார்.

Tamilnadu Assembly Election 2021 : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த 2016- தேர்தலில்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது அரசியல் யுக்தி மூலம் 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து அவர் இறந்துவிட்டாலும், அவரது பெயரில் முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் இந்த ஆட்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இன்னும் சில நாட்களில் அதிமுக ஆட்சி முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றஅதிமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கான அதிமுக முழு மூச்சாக களமிறங்கியுள்ள நிலையில்,கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி, அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ், ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ், அரசு ஊழியர்கள் வீடு கட்ட கடனுதவி தொகை அதிகரிப்பு, அனைவருக்கும் இலவச வீடு, 9 முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு என தமிழக மக்களை கவர்வதற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் மத்திய அரசே விவசாய கடன்களை ரத்து செய்ய மறுத்த நிலையில், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை அனைத்தும் பொருளாதார பாதிப்பை சந்தித்தது. இதனால் விவசாயிகளின் கடந்த பொங்கல் தினத்தில் விவசாயிகளுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் பணம் கொடுத்த தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு வங்கிளில் பயிர்கடன் வாங்கிய 16.43 லட்சம் விவசாயிகளின் 12110 கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்வதாக முதல் அறிவித்துள்ளார். ஆனால்இந்த கடன் தள்ளுபடி அறிவிப்பு கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன்வரை நகைக்கடன் பெற்றுள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழக இன்று அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் பழனிச்சாமி கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி  செய்யப்படுவதாகவும், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.  ஏற்கனவே விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,தற்போது நகைக்கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 15 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இக்குழுக்களில் உள்ள அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட உள்ளதாக கூறப்படும் நிலையில், கடைசி நிமித்தில், முதல்வர் பழனிச்சாமி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu election cooperative agricultural loans and womens self help loans

Next Story
பொதுவுடமை தூண் ஒன்று சாய்ந்தது: தா பாண்டியன் மரணம்; தலைவர்கள் இரங்கல்tha pandian passes away, t pandian passes away, communist party of india senior leader t pandian died, cpi, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தா பாண்டியன் மரணம், தலைவர்கள் இரங்கல், senior leader t pandian death, tamil nadu, kamal haasan condolence, mk stalin condolence, தா பாண்டியன், political leaders condolece to t pandian demise
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com