தேமுதிக கொடி நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்றிவைத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி தொண்டர்களிடம் பேசினார்.
கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் கொடி நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கொண்டாடப்பட்ட கொடி நாள் விழாவில், வெகு நாட்களுக்கு பிறகு தொண்டர்கள் மத்தியில் தோன்றி கட்சி தலைவர் விஜயகாந்த், தேமுதிக கொடி ஏற்றி வைத்து, தொண்டர்களிடம் உரையாடினார். அப்போது அவருடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உடனிருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/vijayakanth-speech.jpg)
கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்த் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்தார். இதனால் அக்கட்சி தொண்டர்கள் விஜயகாந்த எப்போது தொண்டர்களிடம் பேசுவார், தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவாரா? வரும் சட்டமன்ற தேர்தலில் அவரது நிலை என்ன என்பது குறித்து பலவகையான கேள்விகள் எழுந்தன. அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக தேமுதிகவின் கொடி நாளான இன்று சென்னை கோயம்போடு கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் திறந்த வேனில் தோன்றிய விஜயகாந்த், தேமுதிக கட்சி கொடி ஏற்றி வைத்து கட்சி தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.
வெகுநாட்களுக்கு பிறகு விஜயகாந்தை பார்த்த கட்சி தொண்டர்கள் விசில் அடித்து ஆராவராத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கொடி ஏற்றியதை தொடர்ந்து தொண்டர்களிடம் பேசிய அவர், அனைவருக்கும் கொடிநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். நீண்ட நாட்களுக்கு பின் அவரது குரலை கேட்ட மகிழ்ச்சி ஆராவாரத்தில் காணப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தொண்டர் ஒருவரின் குழந்தைக்கு பெயர் சூட்டினார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/vijayakanth-speech3.jpg)
அடுத்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், தலைவர் விரைவில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களை சந்திக்க இருக்கிறார் என்று தெரிவித்தார். மேலும் கூட்டணி குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை என்று கூறிய அவர், தேமுதிக தனித்து நின்றாலும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும், விஜயகாந்த் என்ன அறிவிக்கிறாரோ அதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்த பிரமேலதா, சசிகலாவை தான் சந்திக்க இருப்பதாக கூறிய செய்தி எனக்கே புதிதாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"