பாபு ராஜேந்திரன் விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற 10-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் கண்காணிப்பு குழு படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி இன்று மாலை விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டொயோட்டோ சொகுசு காரை நிறுத்திசோதனை செய்தனர்.
அப்போது காரின் பின் பகுதியில் டிக்கி திறந்து தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒரு டிராவல் பேக்கில் மேல் பகுதியில் துணிகள் அடிக்கப்பட்டு வைத்திருந்தார் .அந்தத் துணிகளை விளக்கும்படி அதிகாரிகள் கூறினர். துணிகளை விலக்கிய போது காரில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்தது. இது குறித்து காரில் வந்தவர்களிடம் போலீஸ் தேர்தல் பறக்கும் படையினரும் தீவிரமாக விசாரித்தனர்
இந்த விசாரணையைில் அந்த பேக்கில் ரூ1 கோடி இருப்பது தெரியவந்த நிலையில், பறக்கும்படி அதிகரகள் அந்த பணத்தை உடனடியாக விழுப்புரம் கருவுலக அதிகாரியிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து காரில் வந்தவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து பா.ம.க வழக்கறிஞர் பாலு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
விக்கிரவாண்டி தொகுதியில் மழவந்தாங்கள் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை செய்ததில் டாக்டர் மதனகோபால் என்பவரிடம் ஒரு கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் அமைச்சர் எ.வ.வேலு அனுப்பி வைத்ததாக தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“