TN IPS OFFICERS TRANSFER : தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள வரும் நிலையில், 54 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை வெளியிட்ட உள்துறை செயலாளர் எஸ்கே பிரபாகர், இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த பட்டியலின்படி, சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக வித்யா ஜெயந்த் குல்கர்னியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாநகர காவல் ஆணையராக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார் சேலம் நகர காவல் ஆணையராக சந்தோஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதில் திருநெல்வேலி மாநகர துணை ஆணையராக ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக கணேசமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் இந்த பதவியில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் செயல்பட்டு வந்தார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜியாக எம் தோமர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தேன்மொழி. சிபிசிஐடி ஐ.ஜி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர தெற்கு கூடுதல் காவல் ஆணையராக கண்ணன், நியமன்ம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து புவனேஸ்வரி சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையராக நியமக்கப்பட்டுள்ள நிலையில், ஆர் தினகரன் மேற்கு மண்டல (கோவை) ஐஜியாகவும், பெரியய்யா சென்னை ஐஜி (பொது) யாகவும், சந்தோஷ் குமார் சேலம் மாநகர காவல் ஆணையராகவும், செந்தில் குமார், சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷ்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"