/tamil-ie/media/media_files/uploads/2023/02/WhatsApp-Image-2023-02-16-at-3.12.24-PM.jpeg)
Trichy protest
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களைபணி நிரந்தரம் செய்ய கோரி, திருச்சி மன்னார்புரம் மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் மறியல் போராட்டம் இன்று நடந்தது.
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு தினக்கூலி 380 ரூபாய் வழங்க வேண்டும். கடந்த 06-01-1998 முதல் பணி புரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
அதேபோல் கே – 2 அக்ரிமெண்டில் பணிபுரியும் மற்றும் தானே, வர்தா, கஜா, ஒக்கி புயல் பாதிப்பின்போது பணிபுரிந்த ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும்.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேசி ஒப்பந்தம் காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மன்னார்புரம் மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் மறியல் போராட்டம் இன்று நடந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2023/02/WhatsApp-Image-2023-02-16-at-3.12.25-PM.jpeg)
இந்த போராட்டத்தில் வட்ட செயலாளர் செல்வராஜ், வட்டத் தலைவர் நடராஜன், வட்ட பொருளாளர் பழனியாண்டி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர், மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us