Advertisment

100 யூனிட் இலவச மின்சாரம்... பரவும் வதந்திக்கு மின் வாரியம் விளக்கம்

தமிழ்நாட்டில் வீட்டு இணைப்புக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Special camps are going to be held in Tamilnadu for changing the name of electricity connection

தமிழ்நாட்டில் வீட்டு இணைப்புக்கு வழங்கப்படும் 100யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வெளியான தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுததிய நிலையில், இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் வீட்டு இணைப்புக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம், ஒரே வளாகத்தில் ஒருவரின் பெயரில் இருக்கும் பல இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுக்கும் நிலை இருப்பதால், ஒரு வளாகத்தில் ஒருவரின் பெயரில், இருக்கும் பல இணைப்புகளை ஒன்றாக இணைத்து, ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக சென்னையில் ஒரு வளாகத்தில் ஒருவரின் பெயரில் இருக்கும் பல இணைப்புகளை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், இதன் மூலம், ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழக்க முடிவும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதேபோன்று கணக்கெடுப்புகளை நடத்தி ஒருவரின் பெயரில் உள்ள பல இணைப்புகளை ஒன்றாக இணைக்க மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த சில தினங்களாக, வீட்டு மின் இணைப்புக்கு வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மின்சார வாரியம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக சமூகவலைதளங்களில் பரப்பப்படும் செய்திகள் உண்மை அல்ல. இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இது போன்ற தகவல்களுக்கு எங்களின் அதிகாரப்பூர்வ தங்களை பார்க்கவும் என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது இது குறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள விளக்கம், பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
tamilnadu news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment