கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், தடாகம், சின்ன தடாகம், மருதமலை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உலா வரும் காட்டு யானைகள் அங்கு உள்ள பொருள்களை சேதப்படுத்தி வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு சின்ன தடாகம் பகுதியில் வட மாநில கட்டிட தொழிலாளர்கள் தங்கி இருந்த கூடாரத்தை சேதப்படுத்தி அவர்களை தாக்க முயன்றது. அதில் இருந்த நான்கு பேர் படுகாயம் அடைந்து நூலிலையில் உயிர் தப்பினர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வனத் துறையினர் அப்பகுதியில் யானை நடமாட்டம் உள்ளதாகவும், யாரும் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்றும் மேலும் கூடாரம் அமைத்து தங்கக் கூடாது எனவும் அறிவுரை வழங்க எச்சரித்து சென்றனர். இதனிடையே நேற்று இரவு தடாகம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகரில் இரண்டு காட்டு யானைகள் இரவு நேரத்தில் அப்பகுதியில் வந்து கொண்டு இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்த ஒருவரை தாக்க ஓடி வந்தது.
உடனடியாக யானையைப் பார்த்து அவர், தனது வாகனத்தை சாலையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். இதனைக் கண்ட அங்கு உள்ள வீட்டில் இருந்த குடும்பத்தினர் யானை வருவதாக கூச்சலிட்டனர். இதில் ஆத்திரமடைந்த ஒரு யானை அவர்களை தாக்க முயன்று அந்த வீட்டின் கேட்டை முட்டியது. இதனால் அங்கு குடியிருந்த குடும்பத்தினர் அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினர். இதனை அருகில் இருந்த வீட்டில் ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார்.
மேலும் அப்பகுதி பொதுமக்கள் நாள்தோறும் யானை நடமாட்டம் உள்ளது. தெருவிளக்குகள் அப்பகுதியில் சரிவர எறியததால் யானை வருவது தெரியாமல் உள்ளது. யானையிடம் யாரும் சிக்கிக் கொள்ளாமல் இருக்க உடனடியாக தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும். யானைகள் அப்பகுதியில் வராமல் இருக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil