tamilnadu government job Fair , Guindy job fair, chennai jobs : தமிழக அரசு வேலை வாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வேலைவாய்ப்பு பெற தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பய்ற்சித்துறை உதவி செய்து வருகிறது. தனியார்த்துறையில் பணியமா்த்தும் நடவடிக்கையாக வெள்ளிதோறும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமும் மாதம் அல்லது இருமாதத்திற்கு ஒருமுறை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
Advertisment
இதன் தொடர்ச்சியாக, வரும் வெள்ளிகிழமை (08.11.2019 ) கிண்டியில் அரசு வேலைவாய்ப்புத் துறை, தனியார் திரை இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்தவிருப்பதாக தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறை மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
சென்னையிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவகங்களும் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளனர். குறைந்தது 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு வளாகத்தில் வரும் வெள்ளியன்று காலை 10 மணி வரை மதியம் 2 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 35 -வயதுக்குள்பட்ட எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் படித்தவர்கள் கலந்து கொள்ளலம்