சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான சவரணாஸ்டோர் கோல்ட் பேலஸ் நிறுவனத்தில் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முன்னணி தொழில் நிறுவனமான செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம், கடந்த 2017-ம் ஆண்டு புதிய ஷோரும் ஒன்றை கட்டுவதற்காக இந்தியன் வங்கியில் இருந்து சரவணா ஸ்டோர் கோல்ட்பேலஸ் நிறுவனம் முதல்கட்டமாக 150 கோடி ரூபாயும், அடுத்த கட்டமாக 90 கோடி ரூபாயும் கடன் பெற்றுள்ளனர். இந்த கடன்தொகையை ஷோரும் திறப்பதற்கு பயன்படுத்தாமல் வேறு காரணங்களுக்காக பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
அதன் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியன் வங்கியில் வாங்கிய 150 கோடி கடனுக்காக சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் 235 மதிப்பிலான சொத்து முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்தது. இதனிடையே ஆக்ஸிஸ் வங்கியில், வாங்கிய கடன் தொடர்பாக மோசடியில் ஈடுபட்டதால் சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் நிறுவனத்தின் 67 கோடி மதிப்பிலான சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
ED has attached immovable properties of M/s Saravana Stores (Gold Palace) Chennai amounting to Rs. 66.93 Crore in relation to a Money Laundering case for defrauding Axis Bank.
— ED (@dir_ed) December 22, 2022
இதேபோல், இந்தியன் வங்கிக்கு திருப்பி தராத கடன் பாக்கி காரணமாக எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் நகை கடை கடந்த ஜனவரி மாதம் ஜப்தி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil