டாஸ்மாக் நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் மேலாளர்கள் சங்கீதா, ராம துரைமுருகன் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின்போது ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில, மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானது என, அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு, சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தினோம் என அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு நேற்று (ஏப்ரல் 23) இந்த மனு மீதான தீர்ப்பை வழங்கினர்.
இதில், அமலாக்கத்துறைக்கு எதிராக தொடரப்பட்ட தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல. அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானது. நள்ளிரவு சோதனை நடத்தியபோது ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதை ஏற்க முடியாது. அதுமட்டுமின்றி, சோதனை அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் மேலாளர்கள் சங்கீதா, ராம துரைமுருகன் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது.