ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்க்கான படிவம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பி வைத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கிய நிலையில், அதிமுக இபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டார். ஆனால் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் வேட்புமனுவில் கையெடுத்திட இபிஎஸ்க்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பொதுக்குழு கூடி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் படிவத்தை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பி வைத்துள்ளார். இந்த படிவங்களை பூர்த்தி செய்து நாளை மாலை 7 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மாண்புமிகு கழக அவை தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/TytWkhzlbM
— AIADMK (@AIADMKOfficial) February 4, 2023
இது தொடர்பாக தமிழ் மகன் உசேன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அதிகாரப்பூர்வ வேட்பாளரை, கழக பொதுக்குழு உறுப்பினர்கள் சுற்றறிக்கை மூலமாக தேர்வு செய்வதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து பொதுக்குழ உறுப்பினர்களுக்கும் விரிவான சுற்றறிக்கை அன்று அனுப்பப்பட்டுள்ளது.
கழக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி மேற்கூறிய சுற்றறிக்கையை பூர்த்தி செய்து பிப்ரவரி 5 அன்று (நாளை) மாலை 7 மணிக்குள் சென்னை அவ்வை சண்முகம் சாலையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் சேர்த்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil