இளங்கோவனே எதிர்பார்க்காத வித்தியாசம்: ஈரோடு கிழக்கில் இறுதி வாக்கு நிலவரம்

வாக்கு எண்ணும் பணி தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சியின் இ.வி.கே.எஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.

வாக்கு எண்ணும் பணி தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சியின் இ.வி.கே.எஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.

author-image
WebDesk
New Update
இளங்கோவனே எதிர்பார்க்காத வித்தியாசம்: ஈரோடு கிழக்கில் இறுதி வாக்கு நிலவரம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் தொடர்பான விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி சார்பில் இவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு நாம் தமிழர் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த ஆகியோருடன் சுமார் 72 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 79 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (மார்ச் 2) காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் பணி தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சியின் இவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில் குறுகிய சேரத்தில் தனது டெபாசிட் வாக்குகளை பெற்றார். ‘

அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் கே.எஸ் தென்னரசு கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில், 7 சுற்றுகள் முடிவில் 19 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். அவர் டெபாசிட் வாங்குவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அதிமுகவுக்கு இது பெரும் வீழ்ச்சி என்று அரசியல் விமர்சகர்கள் பலரும் தெரிவித்து வந்தனர்.

Advertisment
Advertisements

இந்நிலையில், 15 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சியின் இவிகேஎஸ் இளங்கோவன் 66406 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் மொத்தமாக 110156 வாக்குகள் பெற்றார். அடுத்தடுத்த சுற்றுகளில் வாக்குகள் பெற்று டெபாசிட் வாங்க தகுதி பெற்ற அதிமுகவின் கே.எஸ்.தென்னரசு வாக்கு எண்ணிக்கை முடிவில் 43923 வாக்குகள் பெற்றார்.

கடந்த சட்டசபை தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சுமார் 58 ஆயிரம் வாக்குகள் பெற்ற நிலையில், தற்போது அதிமுக நேரடியாக போட்டியிட்டு 15 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றுள்ளது. மேலும் இந்த தேர்தலில் டெபாசிட் வாங்கியது சற்று ஆறுதலாக இருந்தாலும், அடுத்தடுத்து பெற்ற தோல்வி அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் மேனகா 10847 வாக்குகளும், தேமுதிக ஆனந்த் 1432 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை இவிகேஎஸ் இளங்கோவன் தேர்தல் அலுவலரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamilnadu Evks Elangovan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: