ஈரோடு கிழக்கில் பெண் வேட்பாளரை நிறுத்தும் சீமான்: 29-ம் தேதி அறிமுக கூட்டம்

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் வரும் 29-ந் தேதி நடைபெற உள்ளது.

NTK Leader Seeman accused Veera savarker was a subservent of whites
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஈவெரா திருமகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மரணமடைந்தார். இதனால் காலியாக உள்ள அந்த தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றம், இதற்காக வேட்புமனு தாக்கல் வரும் ஜனவரி 31-ந் தேதி தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் இத்தேர்தலில் போட்டியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அதிமுக சார்பில், ஒபிஎஸ் தனது அணி சார்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளதாகவும், பாஜக போட்டியிட்டால் ஆதரவு தர தயார் எனறும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நேற்று ஒபிஎஸ் இபிஎஸ் இருவரும் தனித்தனியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்த நிலையில், இந்த தேர்தலில் பாஜகவின் நிலைபாடு குறித்து இரண்டு நாட்களில் அறிவி்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சட்டசபை தேர்தலில் அதிக வாங்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பெண் வேட்பாளர் போட்யிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 29-ந் தேதி ஈரோட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும் என்றும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu erode east by election ntk women candidate competing

Exit mobile version