/tamil-ie/media/media_files/uploads/2023/02/Rangaraj-Pandy.jpg)
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலுக்காக பிரபல பத்திரிக்கையாளர் ஏற்பாடு செய்ய இருந்த திசைகள் 4 நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவெரா திருமகன் மரணமடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதியில் வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஆளும் கட்சி எதிர்கட்சி என அனைவரும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வருகிறது.
இதனிடையே பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே ரோடு கிழக்கு தொகுதியில் திசைகள் 4 என்ற நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது தொடர்பான தனது சாணக்கியன் யூடியூப் சேனலில் ரங்கராஜ் பாண்டே விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி திசைகள் 4 என்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தோம். மக்களை சந்தித்து ஒரு விவாத நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பணம் செலவழித்து விளம்பரம் செய்து ஏற்பாடுகள் தீவிரமாக நட:த வந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் ஒருநாள் முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கடிதம் கொடுத்தார்.
சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்பதற்காக இந்நிகழ்ச்சி தடை செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பலரிடம் பேசினோம். சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் பார்த்துக்கொள்கிறோம். இதற்கு முன்பு பல நிகழ்ச்சிகளை இது போன்று நடத்தி இருக்கிறோம். நான் மட்டுமே 36 நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். கலைஞரும் ஜெயலலிதாவும் இருக்கும் போது தேர்தல் நேரத்திலேயே இதை செய்திருக்கினே்.
இதுதொடர்பான பல உயர்மட்ட அதிகாரிகளிடம் பேசியும் அவர்களிடம் இருந்து மழுப்பலான பதிலே நமக்கு கிடைத்தது. பார்க்கலாம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு கடைசியாக ஒருநாள் முன்னதாக கடிதம் மூலம் நிகழ்ச்சிக்கு தடை விதித்ததாக கூறுகிறார்கள். இந்த கடிதத்தில், பல முரண்கள் உள்ளன. அரசாங்கத்தின் பக்கம் தவறுகள் இருந்தது.
அதேபோல் விண்ணப்பம் வேறு பெயரிலும் நிராகரிப்பு வேறு பெயரிலும் இருந்தது. இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எப்படி வரும் என்று தெரியவில்லை. இது குறித்து மூத்த வழக்கறிஞர்களிடம் பேசியபோது இதை எதிர்த்து வழங்கு தொடராலாம் என்று கூறினார்கள். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாது என்பது அவர்களுக்கே ஒரு பின்னடைவு. இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எங்கு வரும் என்பது குறித்து தெளிவுகள் இல்லை.
ஒரு சரியான நிர்வாகம், சரியான ஆட்சியர் காவல்துறை அனைவரும் ஒரு பிரச்சனை வந்தால் அதை சரியான முறையில் தடுக்க வேண்டும். அனைவரையும் சுதந்திரமாக பேசவிட வேண்டும். எங்கேயாவது சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்தால் அப்போது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அரசாங்கத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இதை செய்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.