Erode East By Election 2023 Live Updates: ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்குகிறது.
தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் இ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வே.ரா மரணமடைந்தார். இதனால் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியில் மறைந்த திருமகன் ஈ.வே.ரா தந்தை இ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார்.
தொடர்ந்து அதிமக சார்பில் கே.எஸ் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். தொடர்ந்து கடந்த 27-ந்தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் மொத்தம், 74.79 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
- 22:43 (IST) 02 Mar 2023ஈரோடு மக்களுக்கு நன்றி : கே.பாலகிருஷ்ணன்
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சிக்கு கிடைத்ததுதான், ஈரோடு இடைத்தேர்தலின் மகத்தான வெற்றி..” என தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஈரோடு மக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
- 21:23 (IST) 02 Mar 2023எடப்பாடி என்ற தனிநபரை தூக்கி எறிந்தால் தான் அதிமுக வளர முடியும் : பண்ருட்டி ராமச்சந்திரன்
ஈபிஎஸ் முதல்வர் ஆன பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து அதிமுக தோல்வி. இரட்டை இலை சின்னம் கிடைத்தால் போதும் என்று ஈபிஎஸ் எடுக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தோம். எடப்பாடி என்ற தனிநபரை தூக்கி எறிந்தால் தான் அதிமுக வளர முடியும் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
- 20:38 (IST) 02 Mar 2023அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி : எடப்பாடி பழனிசாமி
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் இவிகேஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் கே.எஸ். தென்னரசு பெரும் தோல்வியை சந்தித்துள்ளார். இதனிடையே "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி" என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- 20:37 (IST) 02 Mar 2023த.மா.க வேட்பாளரை விட குறைந்த வாக்குகள் பெற்ற கே.எஸ்.தென்னரசு
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் இவிகேஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் கே.எஸ். தென்னரசு கடந்த தேர்தலில் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். த.மா.க வேட்பாளர் கடந்த தேர்தலில் 58396 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை விட கே.எஸ்.தென்னரசு 15 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார்.
- 20:37 (IST) 02 Mar 2023த.மா.க வேட்பாளரை விட குறைந்த வாக்குகள் பெற்ற கே.எஸ்.தென்னரசு
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் இவிகேஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் கே.எஸ். தென்னரசு கடந்த தேர்தலில் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். த.மா.க வேட்பாளர் கடந்த தேர்தலில் 58396 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை விட கே.எஸ்.தென்னரசு 15 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார்.
- 20:16 (IST) 02 Mar 2023அதிமுக-பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி என்பதை மக்கள் உணர்த்தியுள்ளனர் : திருமாவளவன்
முதல்வரின் பிறந்தநாள் பரிசாக ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றியை மக்கள் வழங்கியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக கூட்டணிக்கு மக்கள் மீண்டும் அளித்துள்ள மகத்தான அங்கீகாரமாகவும் அதிமுக-பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி என்பதை உணர்த்துவதாகவும் இவ்வெற்றி அமைந்துள்ளது என திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வரின் பிறந்தநாள் பரிசாக ோடு_கிழக்குத் தொகுதி வெற்றியை மக்கள் வழங்கியுள்ளனர்
— Thol. Thirumavalavan (@thirumaofficial) March 2, 2023
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக கூட்டணிக்கு மக்கள் மீண்டும் அளித்துள்ள மகத்தான அங்கீகாரமாகவும்
அதிமுக-பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி என்பதை உணர்த்துவதாகவும் இவ்வெற்றி அமைந்துள்ளது.@EVKSElangovan pic.twitter.com/iS7cgE5HHY - 19:36 (IST) 02 Mar 2023ஈரோடு கிழக்கு ஃபார்முலா தொடங்கி ஜனநாயக படுகொலை நடந்துள்ளது - இ.பி.எஸ் கண்டனம்
ஈரோடு கிழக்கு ஃபார்முலா என ஒன்றை உருவாக்கி ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளது திமுக". "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், பணநாயகத்தின் மூலம் காங். வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர்" *அதிமுக இடைக்கால என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
- 18:51 (IST) 02 Mar 2023ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட் இவிகேஸ் இளங்கோவன், 1,10,556 வாக்குளும், அதிமுகவின் கே.எஸ் தென்னரசு 43,981 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் மேனகா 7,984 வாக்குகளும், தேமுதிகவின் ஆனந்த் 1115 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
- 18:42 (IST) 02 Mar 2023ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல்; ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
அவர் 1,10,556 வாக்குகள் பெற்றிருந்தார். இரண்டாம் இடத்தை அதிமுகவும், மூன்றாம் இடத்தை நாம் தமிழரும் பெற்றுள்ளன.
- 18:41 (IST) 02 Mar 2023இவ்வளவு பெரிய வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை : ஈவிகேஎஸ்
இவ்வளவு பெரிய வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. என்னை வெற்றி பெற வைத்த ஈரோடு மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவேன் என - ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
- 18:38 (IST) 02 Mar 2023ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி
ஈரோடு கிழக்கு தொகுதியில் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
- 18:38 (IST) 02 Mar 2023ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி
ஈரோடு கிழக்கு தொகுதியில் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
- 17:45 (IST) 02 Mar 2023ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்; மாலை 5.30 நிலவரம்.. 1 லட்சம் வாக்குகளை நெருங்கிய ஈ.வி.கே.எஸ்
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் மாலை 5.30 நிலவரப்படி 97,729 வாக்குகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னணியில் உள்ளார்.
அதிமுகவின் தென்னரசு 38 ஆயிரத்து 790 வாக்குகளுடனும், நாம் தமிழர் 7984 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
தேமுதிக வேட்பாளர் 1115 வாக்குகள் பெற்றுள்ளார்.
- 17:39 (IST) 02 Mar 2023டெபாசிட் இழந்த தே.மு.தி.க., 3ம் இடத்துக்கு முன்னேறிய நாம் தமிழர்
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட ஆனந்த் டெபாசிட் இழந்தார்.
7984 வாக்குகளுடன் நாம் தமிழர் மூன்றாம் இடத்தில் தொடர்கிறது.
- 16:19 (IST) 02 Mar 2023'பெரியார் மண் கைவிடவில்லை, எதிர்பார்த்த முடிவுதான்'.. அன்பில் மகேஷ்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரியார் மண் கைவிடவில்லை என்று கூறிய அன்பில் மகேஷ், இது எதிர்பார்த்த முடிவுதான் என்றார்.
- 16:05 (IST) 02 Mar 202348 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை.. 5 ஆயிரத்தை கடந்த நாம் தமிழர்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 48 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.
அதிமுக வேட்பாளர் 28 ஆயிரத்து 637 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் 5117 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும், தேமுதிக வேட்பாளர் 803 வாக்குகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளார்.
- 14:50 (IST) 02 Mar 202370 ஆயிரம் வாக்குகளுடன் இளங்கோவன் முன்னிலை.. மூன்றாம் இடத்தில் நாம் தமிழர்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 25 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார். 4200 வாக்குகளுடன் நாம் தமிழர் மூன்றாம் இடத்தில் உள்ளது.
- 13:55 (IST) 02 Mar 2023மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர்- ஸ்டாலின்
நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரமாக இந்த இடைத்தேர்தல் அமைந்துள்ளது. இடைத்தேர்தல் மூலம் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர்; திராவிட மாடல் ஆட்சி நிலைக்க வேண்டும் என்ற தீர்ப்பை மக்கள் அளித்துள்ளனர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 13:35 (IST) 02 Mar 2023தென்னரசு பேட்டி
ஜனநாயகத்திற்கு மதிப்பில்லை, பணநாயகம் வென்று விட்டது- ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் தென்னரசு பேட்டி
- 13:32 (IST) 02 Mar 2023பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
திருமங்கலம் ஃபார்முலாவை முறியடித்து, விஞ்ஞான ரீதியாக இப்படியும் ஒரு வெற்றியை பெற முடியும் என்பதை ஈரோடு இடைத்தேர்தலில் திமுக நிரூபித்துள்ளது - நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
- 13:32 (IST) 02 Mar 2023உணவு இடைவேளை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை, உணவு இடைவேளை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. 45 நிமிட உணவு இடைவேளைக்கு பிறகு பிற்பகல் 1.45 மணிக்கு மீண்டும் வாக்கு எண்ணிக்கை பணி தொடரும்
- 12:58 (IST) 02 Mar 2023மனோ தங்கராஜ் பேட்டி
அனைவருக்குமான வளர்ச்சி என்ற திராவிட மாடல் தத்துவத்தினால், ஈரோடு கிழக்கில் சமூக நீதி கொள்கைக்கு, மகத்தான வெற்றி கிடைத்துள்ளது - சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
- 12:56 (IST) 02 Mar 20237வது சுற்று முன்னிலை நிலவரம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 7வது சுற்று முன்னிலை நிலவரம்
- காங்கிரஸ் : 53,548
- அதிமுக : 19,936
33,612 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார்.
- 12:55 (IST) 02 Mar 2023தபால் வாக்கு எண்ணிக்கை நிறைவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தபால் வாக்கு எண்ணிக்கை நிறைவு
காங்கிரஸ் - 250, அதிமுக - 104, நாம் தமிழர் - 10, தேமுதிக - 1
25 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 12:42 (IST) 02 Mar 20237வது சுற்று
7வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 6வது சுற்று முடிவிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை
- 12:41 (IST) 02 Mar 2023முன்னிலை
- காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 46,179 வாக்குகள் பெற்று முன்னிலை
- அதிமுக வேட்பாளர் தென்னரசு 16,777 வாக்குகள் பெற்று பின்னடைவு
- நாம் தமிழர் - 2443, தேமுதிக - 386 வாக்குகள் பெற்று பின்னடைவு
- 12:30 (IST) 02 Mar 20236வது சுற்று முன்னிலை நிலவரம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 6வது சுற்று முன்னிலை நிலவரம்
- காங்கிரஸ் : 46,179
- அதிமுக : 16,777
29,402 வாக்குகள் வித்தியாசத்தில் காங். வேட்பாளர் முன்னிலை
- 12:13 (IST) 02 Mar 20235வது சுற்று முன்னிலை நிலவரம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 5வது சுற்று முன்னிலை நிலவரம்
- காங்கிரஸ் : 39,855
- அதிமுக : 13,515
26,340 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை
- 12:02 (IST) 02 Mar 2023காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
வெற்றியின் பெரும்பங்கு முதல்வர் ஸ்டாலினையே சாரும். மதசார்பற்ற கூட்டணி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுவதாக அதிமுகவே கூறியுள்ளது- காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
- 12:00 (IST) 02 Mar 2023வெளியேறிய தென்னரசு
அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினார்.
- 11:46 (IST) 02 Mar 20235வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 5வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 4 சுற்றுகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார்.
- 11:46 (IST) 02 Mar 2023இளங்கோவன் முன்னிலை
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 31,928 வாக்குகள் பெற்று முன்னிலை
அதிமுக வேட்பாளர் தென்னரசு 10,618 வாக்குகள் பெற்று பின்னடைவு
- 11:39 (IST) 02 Mar 2023தென்னரசு பேட்டி
ஜனநாயகத்திற்கு மதிப்பில்லை, பணநாயகம் வென்று விட்டது- ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் தென்னரசு பேட்டி
- 11:38 (IST) 02 Mar 2023ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம் - 4வது சுற்று
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 4வது சுற்று முன்னிலை நிலவரம்
- காங்கிரஸ் : 31,928
- அதிமுக : 10,618
21,310 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை
- 11:15 (IST) 02 Mar 2023ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 4வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 3 சுற்றுகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார்.
- 11:10 (IST) 02 Mar 2023காங்கிரஸ் வெற்றி பெறும்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
- 11:09 (IST) 02 Mar 2023ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்:
- காங்கிரஸ் : 24,938
- அதிமுக : 10,428
14,510 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார்.
- 11:04 (IST) 02 Mar 2023ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில், முதல் சுற்று முடிவில் 30 வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை. மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்,நோட்டாவிற்கு 23 வாக்குகள் பதிவாகியுள்ளது. 2 சுற்றுகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார்.
- 10:39 (IST) 02 Mar 2023வாக்கு எண்ணிக்கையில் தாமதம்
’ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : வாக்கு எண்ணிகை நிறுத்தப்படவில்லை. வாக்கு எண்ணிக்கை தாமதம் அடைந்துள்ளது’ என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார்.
- 10:13 (IST) 02 Mar 2023திமுக கூட்டணி கட்சியினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை. திமுக கூட்டணி கட்சியினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்
- 09:59 (IST) 02 Mar 2023காங்கிரஸ் 22,746 வாக்குகள், அதிமுக 6,497 வாக்குகள்
காங்கிரஸ் 22,746 வாக்குகள், அதிமுக 6,497 வாக்குகள், நாம் தமிழர் 510 வாக்குகள் இதுவரை பெற்றுள்ளன.
- 09:26 (IST) 02 Mar 2023ஈவிகேஎஸ் இளங்கோவன் 11,020 வாக்குகள் பெற்று முன்னிலை
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 11,020 வாக்குகள் பெற்று முன்னிலை. அதிமுக வேட்பாளர் தென்னரசு 3,767 வாக்குகள் பெற்று பின்னடைவு. நாம் தமிழர் - 368, தேமுதிக - 73 வாக்குகள் பெற்று பின்னடைவு.
- 09:19 (IST) 02 Mar 2023ஈவிகேஎஸ் இளங்கோவன் 9,786, அதிமுக 3,613 வாக்குகள் பெற்று பின்னடைவு
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 9,786 வாக்குகள் பெற்று முன்னிலை. அதிமுக வேட்பாளர் தென்னரசு 3,613 வாக்குகள் பெற்று பின்னடைவு. நாம் தமிழர் - 368, தேமுதிக - 73 வாக்குகள் பெற்று பின்னடைவு.
- 09:09 (IST) 02 Mar 2023ஈவிகேஎஸ் இளங்கோவன் 5,212 வாக்குகள் பெற்று முன்னிலை
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 5,212 வாக்குகள் பெற்று முன்னிலை . அதிமுக வேட்பாளர் தென்னரசு 2,932 வாக்குகள் பெற்று பின்னடைவு .
- 08:55 (IST) 02 Mar 2023முதல் சுற்றில் ;1,236 வாக்குகள் பெற்றுள்ள காங்கிரஸ்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை . முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை. 1,236 வாக்குகள் பெற்றுள்ள காங்கிரஸ்.
- 08:34 (IST) 02 Mar 2023தபால் வாக்குகளில் காங்கிரஸ் முன்னிலை
தபால் வாக்குகளில் காங்கிரஸ் முன்னிலை காங்கிரஸ் 62 தபால் வாக்குகளும், அதிமுக 35 தபால் வாக்குகளும் பெற்றுள்ளது.
- 08:09 (IST) 02 Mar 2023வாக்கு எண்ணிக்கை தொடக்கம் : முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். இன்று மதியத்திற்குள் முடிவுகள் தெரியவரும் வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு.
- 07:51 (IST) 02 Mar 2023வாக்கு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டுவரப்படுகின்றன
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்தில் தொடக்கம். ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு வாக்கு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டுவரப்படுகின்றன.
- 07:50 (IST) 02 Mar 2023வாக்கு எண்ணும் மையத்தில் கடும் சோதனைக்கு பிறகு பணியாளர்கள் அனுமதிக்கப்படுகின்றன
வாக்கு எண்ணும் மையத்தில் பணியாளர்கள், அரசியல் கட்சி முகவர்களை தீவிர சோதனைக்கு பிறகே போலீசார் உள்ளே அனுமதிக்கின்றனர்
- 07:47 (IST) 02 Mar 2023அதிமுக வேட்பாளர் தென்னரசு வருகை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை; வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரிக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு வருகை. மேலும் நாம் தமிழர் வேட்பாளர்களும் வருகை தந்தனர்,
- 07:17 (IST) 02 Mar 2023397 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன
ஈரோடு கிழக்கு தொகுதியில் 397 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன.
- 07:10 (IST) 02 Mar 2023காவல்துறை கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - சித்தோடு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை . வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவல்துறை கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
- 07:09 (IST) 02 Mar 2023இன்று காலை 8 மணிக்கு வாக்கு
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஆயுத்த பணிகள் தொடங்கி உள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.