Advertisment

Erode By Election Polling Updates: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 72 சதவீத வாக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், இது குறித்த அப்டேட்களை தெரிந்துகொள்ள இந்த பதிவுடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Erode election

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வே.ரா திருமகன் வெற்றி பெற்றார். ஆனால், 2023-ம் ஆண்டு அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றிருந்தார்.

Advertisment

இதனிடையே கடந்த, டிசம்பர் மாதம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணமடைந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (பிப்ரவரி 5) ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அ.தி.மு.க பா.ஜ.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடாத நிலையில், தி.மு.க – நாம் தமிழர் கட்சி இந்த இடைத்தேர்தலில் நேரடியாக மோதுகிறது.

  • Feb 06, 2025 02:35 IST

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 72 சதவீத வாக்குகள் பதிவு

    ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று நடந்த இடைத்தேர்தலில் 6 மணி நிலவரப்படி 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தி.மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.



  • Feb 05, 2025 18:11 IST

    ஈரோடு கிழக்கு - வாக்குப்பதிவு நிறைவு!

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 64.02% வாக்குகள் பதிவாகியுள்ளன. பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.



  • Advertisment
    Advertisement
  • Feb 05, 2025 17:50 IST

    நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமி பேட்டி

    இடைத்தேர்தலில் முறைகேடு நடப்பதாகவும் திட்டமிட்டு செய்வதாகவும் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி பேட்டி அளித்துள்ளார்.



  • Feb 05, 2025 17:31 IST

    ஈரோடு கிழக்கு இதைத்தேர்தல் - வாக்குவாதம்

    ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் திமுக மற்றும் நா.த.க இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வீரப்பன் சத்திரம் வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக குற்றம்சாட்டி, சிசிடிவி கேமரா காட்சிகளை காண்பிக்குமாறு நா.த. க - வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 



  • Feb 05, 2025 17:00 IST

    ஈரோடு இடைத்தேர்தல்: தி.மு.க - நா.த.க இடையே வாக்குவாதம்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தி.மு.க - நா.த.க கட்சியினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை வாக்குப்பதிவு மையத்தில் இருந்து 200 மீட்டருக்கு வெளியே போலீசார் அனுப்பி வைத்தனர்.  



  • Feb 05, 2025 15:52 IST

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - மதியம் 3 மணி நிலவரப்படி 53.63% வாக்குகள் பதிவு 

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 53.63% வாக்குகள் பதிவாகியுள்ளது

     



  • Feb 05, 2025 15:01 IST

    ஈரோடு: வாக்குப்பதிவு இயந்திரம் திடீர் பழுது

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 182வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் திடீர் பழுதாகிவிட்டது என்று தகவல். சுமார் அரை மணி நேரமாகியும் பழுது நீக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். 



  • Feb 05, 2025 14:35 IST

    வாக்குச்சாவடிக்குள் நாதக வேட்பாளருக்கு அனுமதி மறுப்பு

    ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை, வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க போலீசார் மறுத்தனர். கட்சி துண்டுடன் வாக்குச்சாவடிக்கு வந்த அவரை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். கழுத்தில் இருந்த கட்சி துண்டை கழற்றிய பிறகு, வாக்குச்சாவடிக்குள் நா.த.க வேட்பாளர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் சீதாலட்சுமி, காவல்துறையினர் பாரபட்சம் பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.



  • Feb 05, 2025 13:26 IST

    ஈரோடு: 42.41% வாக்குகள் பதிவு

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 42.41% வாக்குகள் பதிவாகியுள்ளது. 



  • Feb 05, 2025 12:43 IST

    ‘என் வாக்கை மற்றொரு நபர் செலுத்திவிட்டார்’ - பெண் பரபரப்பு புகார்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தன் வாக்கை மற்றொரு நபர் செலுத்தியதாக பரிதா பேகம் என்ற பெண் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் முறையாக பதிலளிக்கவில்லை எனவும் அப்பெண் குறிபிட்டுள்ளார். தனக்கான வாக்குரிமை வேண்டும் என்று அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.



  • Feb 05, 2025 11:48 IST

    11 மணி நிலவரம்

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில், காலை 11 மணி நிலவரப்படி 25.98 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Feb 05, 2025 09:26 IST

    10.85 % வாக்குப்பதிவு என தகவல்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காலை 9 மணி நிலவரப்படி 10.85 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து வாக்கு செலுத்தி வருகின்றனர்.



  • Feb 05, 2025 09:13 IST

    இடைத்தேர்தலில் வாக்களித்து வரும் பொதுமக்கள்

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.



  • Feb 05, 2025 08:24 IST

    திராவிட மாடல் அரசின் 4ம் ஆண்டு சாதனைகளே காரணமாக இருக்கும்: தி.மு.க வேட்பாளர் பேட்டி

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு செலுத்திய திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார், "திராவிட மாடல் அரசின் 4ம் ஆண்டு சாதனைகளே திமுகவின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.



  • Feb 05, 2025 08:10 IST

    தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்திய தி.மு.க வேட்பாளர்

    ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும்,வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்  தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார். 



  • Feb 05, 2025 07:49 IST

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிப்பு

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 237 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. நேற்றைய தினமே அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பபட்டுவிட்டது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 11 வகையான அடையாள அட்டையுடன் வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்தலாம். வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், குடிநீர், கழிப்பறை என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காட்சிகளை தேர்தல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது, இந்த இடைத்தேர்தல் நடைபெறும் 9 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.



  • Feb 05, 2025 07:33 IST

    இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்: வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்

    ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், ஜனநாயக கடமை ஆற்றி வரும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.



Erode District
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment