/tamil-ie/media/media_files/uploads/2021/11/Sathanur-dam.jpg)
Tamilnadu Sathanur Dam Update : திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தணூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் தென்பெண்னை ஆற்று காரையோர மக்களுக்கு வெள்ளள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்பு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் ஊருக்குள் வௌளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆற்று கரையோர மக்களுளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட வருகிறது இதனால் மக்களிடையே பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீர் தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் நிலையில், ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது அதிகாரப்பூர் ட்விட்டர் பதிவில்,
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையிலிருந்து *50955* கனஅடி உபரி நீர் வெளியேறி வருவதால் தென்பெண்ணையாற்றங்கரையோர கிராம பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
— TN SDMA (@tnsdma) November 19, 2021
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 50955 கனஅடி உபரி நீர் வெளியேறி வருவதால் தென்பெண்ணையாற்றின் கரையோர கிராம பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தென்பெண்னை ஆற்றின் கரையேர கிராம மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 99 அடியாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், அணையில் இருந்து 50955 கனஅடி உபரி நீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.